பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1084/2025
கௌரவ (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம்,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான வவுனியாவின், தச்சங்குளம் விமானநிலையத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்காக அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகள் சுவீகரிக்கப்பட்டதுடன் நீண்ட காலமாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட வீதிகளை தொடர்ந்தும் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) குறிப்பாக, தச்சங்குளம் – மூன்றுமுறிப்பு பிரதான வீதி நீண்டகாலமாக பொது மக்களின் பாவனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதென்பதையும்;
(iii) இதனால், தச்சங்குளம் கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் தமது தேவைகளுக்காக இரண்டு கிலோ மீற்றர் பயணித்து கிராம அலுவலரின் அலுவலகத்திற்கு செல்வதற்கு பதிலாக சுற்றுப்பாதையில் 12 கிலோ மீற்றர் வரையில் செல்ல வேண்டியுள்ளதென்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) ஆமெனில், மேற்குறிப்பிட்ட தச்சங்குளம் – மூன்றுமுறிப்பு பிரதான வீதியை பொது மக்களின் பாவனைக்காக திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(ii) அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-08-22
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks