பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1083/2025
கௌரவ (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம்,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வன்னிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கருங்கல் உடைத்தல் மற்றும் மண் அகழ்வு நடவடிக்கைகளுக்கு மாகாண சபை நிருவாகத்தின் கீழுள்ள எந்தவொரு நிறுவனத்திடமிருந்தும் அனுமதி பெறாமல் நேரடியாக மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள நிறுவனங்களிடமிருந்தே அனுமதி பெறப்படுகின்றது என்பதையும்;
(ii) மேற்படி செயற்பாட்டின்போது தொல்பொருளியல் திணைக்களம், புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் உரிய பிரதேச செயலகம் ஆகிய நிறுவனங்கள் தொடர்புபடுகின்றன என்பதையும்;
(iii) அகழ்ந்தெடுக்கப்பட்ட கனிய வளங்களை கொண்டு செல்வதற்கு உள்ளூராட்சி நிறுவனங்களின் நிருவாகத்தின் கீழுள்ள வீதிகளைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் குறித்த உள்ளூராட்சி நிறுவனத்திடமிருந்து அனுமதி பெறப்படுகின்றது என்பதையும்;
(iv) அதன்படி, வட மாகாணத்தின் வளங்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் அனுமதியின்றி பிற மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) வட மாகாணத்தின் வளங்களை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் அனுமதியின்றி பிற மாகாணங்களுக்கு கொண்டு செல்வதற்கு இடமளிக்கப்படுமா என்பதையும்;
(ii) மேற்படி நிலையைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் மாற்றுத் திட்டம் யாதென்பதையும்;
அவர் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-08-19
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம், பா.உ.
அமைச்சு
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks