01

E   |   සි   |  

 திகதி: 2025-10-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

1009/2025: Support and Rehabilitation for victims of mob violence

1009/2025
கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி,— நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் கும்பல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நிதி இழப்பீடு, மருத்துவ உதவி அல்லது புனர்வாழ்வுத் திட்டங்கள் போன்ற ஏதேனும் குறிப்பிட்ட உதவிகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதா அல்லது அறிமுகப்படுத்த எண்ணியுள்ளதா என்பதையும்;
(ii) கும்பல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற மாவட்டங்கள் அல்லது மாகாணங்களில் இதுபோன்ற எந்தவொரு ஒத்துழைப்புத் திட்டங்களினதும் தற்போதைய நடைமுறைப்படுத்தலினதும் நிலை என்ன என்பதையும்;
(iii) இத்தகைய பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியான நேரத்தில் ஒத்துழைப்பு மற்றும் நீண்டகால உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்காக மாகாண சபைகள் அல்லது மாவட்டச் செயலகங்களுக்கு ஏதேனும் சுற்றறிக்கைகள், வழிகாட்டுதல்கள் அல்லது கொள்கைச் சட்டகங்கள் வெளியிடப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-22

கேட்டவர்

கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பா.உ.

அமைச்சு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks