பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
985/2025
கௌரவ கிங்ஸ் நெல்சன்,— வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் பயிற்சிகளை வழங்கியதன் மூலம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஈட்டிய வருமானம் யாதென்பதையும்;
(ii) மேற்படி வருமானம் ஈட்டப்படும் வழிகள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி காலப்பகுதியினுள் பணியகத்தில் பயிற்சியைப் பெற்று வெளிநாடு சென்ற பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் பயிற்சியைப் பெறாமல் வெளிநாடு சென்ற பணியாளர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) முதன்முறையாக வெளிநாடு செல்லும் ஒவ்வொரு பணியாளருக்கும் பணியகத்தின் மூலமான பயிற்சியை கட்டாயமாக்குவது முக்கியமானதாக அமைவதால், அது தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-05
கேட்டவர்
கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.
அமைச்சு
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks