பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
889/2025
கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற ‘அளிப்புப் பத்திரம்’ அல்லது ‘காணி உரிமம்’ இல்லாது மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூர்ப்பற்று, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அரசாங்க காணிகளில் மக்கள் குடியிருக்கின்றமையை அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி ஆட்களின் எண்ணிக்கை, அவர்களின் பெயர்கள் மற்றும் ஏற்புடைய விபரங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி அரசாங்க காணிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட ஆட்களை சட்டரீதியாக வெளியேற்றுவதற்கு 2017.01.01 தொடக்கம் 2025.03.31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஏற்புடைய பிரதேச செயலாளர் அவர்களுக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளாரா என்பதையும்;
(iv) ஆமெனில், மேற்படி ஆட்களின் எண்ணிக்கை, அவர்களின் பெயர்கள் மற்றும் ஏற்புடைய விபரங்கள் யாவை என்பதையும்;
(v) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்களில் மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவுகளுக்கமைய அரசாங்க காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை, அவர்களின் பெயர்கள் மற்றும் ஏற்புடைய விபரங்கள் யாவை என்பதையும்;
(vi) வழக்குத் தாக்கல் செய்யவேண்டி இருப்பினும் ஏற்புடைய பிரதேச செயலாளரினால் வழக்குத் தாக்கல் செய்யப்படாத ஆட்கள் இருக்கின்றார்களா என்பதையும்;
(vii) ஆமெனில், மேற்படி ஆட்களின் எண்ணிக்கை, அவர்களின் பெயர்கள் மற்றும் ஏற்புடைய விபரங்கள் யாவை என்பதையும்;
(viii) குறிப்பிட்ட சிலருக்கு எதிராக மாத்திரம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமைக்கும், கூடுதலான ஆட்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படாமைக்குமான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-06-24
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks