பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2026-06-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0887/2026: Apply for Land deeds by the people in Eravurpattu, Chenkaladi DSD, Batticaloa

887/2025
கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) காணியற்ற மக்கள் தங்களுக்குக் காணியொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக 2017.01.01 முதல் 2025.03.31 திகதி வரையான காலப்பகுதிக்குள் ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேச செயலகத்தில் விண்ணப்பத்துள்ளார்கள் என்பதை அவர் அறிவாரா;
(ii) ஆமெனில், அம் மக்களின் எண்ணிக்கை, பெயர்கள் மற்றும் ஏற்புடைய விபரங்கள் யாவை;
(iii) அம்மக்களுக்கு அளிப்புப் பத்திரம் அல்லது காணி உரிமம் வழங்கப்பட்டுள்ளதா;
(iv) ஆமெனில், அம் மக்களின் எண்ணிக்கை, பெயர்கள் மற்றும் ஏற்புடைய விபரங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அரச காணிகளில் குடியிருப்பவர்களில் பலருக்கு இன்று வரை அளிப்புப் பத்திரம் அல்லது காணி உரிமம் வழங்கப்படாதுள்ளது என்பதை அவர் அறிவாரா;
(ii) ஆமெனில், அம் மக்களின் எண்ணிக்கை, பெயர்கள் மற்றும் ஏற்புடைய விபரங்கள் யாவை;
(iii) அம் மக்களுக்கு இதுவரை காணி உறுதி அல்லது காணி உரிமம் வழங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-06-24

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks