பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
----
கேட்கப்பட்ட திகதி
2026-03-03
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.
அமைச்சு
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(அ) (i) இலங்கையில் மீன்பிடித் தொழிலை மூன்று முக்கிய துறைகளாக வகைப்படுத்தலாம்: கடல் மீன்பிடி, நன்னீர் மீன்பிடித்தல் மற்றும் மீன் வளர்ப்பு.
ஒரு தொழிலாக, ஏராளமான மக்கள் இந்தத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். இது உற்பத்தி முதல் இறுதி நுகர்வோரிடம் சேரும் வரையுள்ள அனைத்துக் கட்டங்களையும் உள்ளடக்குகிறது. கடலில், நன்னீரில் மீன்பிடியிலும் மற்றும் மீன் வளர்ப் பிலும் நேரடியாக ஈடுபட்டுள்ள மீனவர்கள், படகு உற்பத்தியாளர்கள், பல்வேறு விநியோகத் தர்கள், இறக்குமதியாளர்கள்/ ஏற்றுமதியாளர்கள், மீன் உற்பத்திகளின் மொத்த விற்பனை யாளர்கள்/ சில்லறை விற்பனையாளர்கள் ஆகியோரும் இந்தத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அமைச்சினால் 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிபரத் தரவுகளின்படி, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள சுறுசுறுப் பான மீனவர்களின் எண்ணிக்கை சுமார் 320,470 ஆகும். இதில் 188,940 கடற்றொழில் மீன்பிடிக் குடும்பங்களைச் சேர்ந்த, 225,480 கடல் மீனவர் களும் 83,960 நன்னீர் மீன்பிடிக் குடும்பங்களைச் சேர்ந்த 94,990 நன்னீர் மீனவர்களும் உள்ளனர்.
(ii) ஆம். மீன்பிடித் தொழிலின் சவாலான, ஆபத்தான மற்றும் இடர்நேர்வான தன்மையைக் கருத்திற்கொண்டு, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, மீனவர் தனிநபர் காப்பீட்டுத் திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், மற்றும் கமத் தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை ஆகியவற்றால் மீனவர் தனிநபர் காப்பீட்டுத் திட்டங்கள் இரண்டு செயற்படுத்தப்படுகின்றன. இந்த நோக்கத்திற்காக மீனவர் தனிநபர் காப்பீட்டுத் திட்டத்தைப் பெற மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது அது செயற்படுத்தப்பட்டு வருகிறது.
· மீனவர் பாதுகாப்புக் காப்புறுதி
இந்தக் காப்பீட்டுத் திட்டம் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தால் 2022 முதல் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் காப்பீட்டின்கீழ், 2025ஆம் ஆண்டிற்கு 10,869 மீனவர்கள் சந்தா செலுத்தியுள்ளனர்.
· சயுர மீனவர் தனிநபர் காப்பீடு
சயுர மீனவர் தனிநபர் காப்புறுதித் திட்டம் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையால் செயற்படுத்தப்படுகிறது.
மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, விபத்து மரணம் மற்றும் நிரந்தர ஊனம் ஏற்பட்டால், மேற்படி மீனவர் காப்புறுதித் திட்டங்களின்மூலம் காப்பீடு செய்யப்பட்டுத் தவணைக் கட்டணமாக ரூ. 1,915 செலுத்துகின்றவர்களுக்கு ரூ. 1 மில்லியன் - 1,000,000 ரூபாய்வரையும், அதேபோன்று 2,605 ரூபாய் செலுத்துகின்றவர்களுக்கு ரூ. 1.5 மில்லியன் வரையும், ரூ. 3,165 செலுத்துகின்றவர்களுக்கு ரூ. 2 மில்லியன் வரையும் காப்புறுதிச் சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் காப்புறுதித் திட்டத்தில்,
போன்றவற்றுக்கான காப்பீட்டு சலுகைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
(iii) புதிய மீனவர் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புச் சலுகைகள் திட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, அதன்கீழ் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை, கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை ஆகியவற்றால் இணைந்து செயற்படுத்தப் படுகிறது.
இந்தப் புதிய மீனவர் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புச் சலுகைகள் திட்டம், மீனவ சமூகத்திற்கான ஒரு தனித்துவமான திட்டமாகும். மேலும், இது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகச் செயற்படுத்தப்படுகின்றது.
புதிய மீனவர் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புச் சலுகைகள் திட்டம், உலக மீனவர் தினத்தையொட்டி, 2025 நவம்பர் 21ஆம் திகதி தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், மீனவர்கள் இப்போது கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகங்கள், இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட அலுவலகங்கள், கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபைமூலம் இந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேரலாம்.
இங்கு, பங்களிப்பாளர் ஓய்வுபெறும் வயதி லிருந்து (60 வயது நிறைவடைந்த பிறகு) வாழ்நாள் வரை மாதாந்தம் ஓய்வூதியத்தைப் பெற உரிமை உண்டு. மேலும், வயது அதிகரிக்கும்போது ஓய்வூதியப் பலன் அதிகரிக்கும் வகையில் தொடர்புடைய ஓய்வூ தியத்தின் நிதி மதிப்பு சரி செய்யப்பட்டுள்ளது.
மேலும், பங்களிப்பாளருக்கு நிரந்தர பூரணமான/பகுதியளவான இயலாமை மற்றும் மரணம் ஏற்பட்டால், ஒரு மொத்த தொகைப் பணமும் வழங்கப்படும்.
எதிர்காலத்தில் இந்த ஓய்வூதியப் நலன் வாழ்க்கைத் துணைவர்களுக்கும் பொருந்தும் வகையில் தேவையான சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றது.
(ஆ) பொருந்தாது.
பதில் தேதி
2026-03-03
பதில் அளித்தார்
கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks