01

E   |   සි   |  

 திகதி: 2025-10-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0552/2025: டிஜிட்டல் அடையாள அட்டையின் அறிமுகம்: விபரம்

552/2025
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— டிஜிட்டல் பொருளாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கைப் பிரசைகளுக்காக டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படுமா என்பதையும்;
(ii) டிஜிட்டல் அடையாள அட்டையைப் பயன்படுத்துவதன் நன்மைகள் யாவை என்பதையும்;
(iii) அந்த அடையாள அட்டையைத் தயாரிப்பதன் செயன்முறை யாது என்பதையும்;
(iv) ஒரு அடையாள அட்டையைத் தயாரிப்பதற்குச் செலவாகும் தொகை எவ்வளவு என்பதையும்;
(v) ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள அனைத்து இலங்கைப் பிரசைகளுக்கும் அந்த அடையாள அட்டையைத் தயாரிப்பதற்குச் செலவாகும் மொத்தத் தொகை எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படுவதற்கு நிதி பெறப்படும் விதம் யாதென்பதையும்;
(ii) அதற்காக வெளிநாட்டுக் கடன் அல்லது உதவி பெறப்படுமாயின், அக்கடன்/உதவியை வழங்கும் நாடுகள் அல்லது நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(iii) அந்த அடையாள அட்டையைத் தயாரிக்கும் செயன்முறையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் அனுகூலங்கள் யாவை என்பதையும்;
(iv) அந்த முதலீட்டாளர்களால் தனிப்பட்டவர்களின் தரவுகளைப் பெற முடியாது என்பது உறுதியளிக்கப்படுமா என்பதையும்;
(v) டிஜிட்டல் அடையாள அட்டையைத் தயாரிக்கும் செயன்முறை தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களும் சபையில் சமர்ப்பிக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-10

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-11-27

பதில் அளித்தார்

கௌரவ எரங்க வீரரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks