01

E   |   සි   |  

 திகதி: 2023-10-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

3475/2023: Not issuing a deed on paddy land of Mr. Gunapala by Land Reforms Commission

3475/2023

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) திஹகொட, நாயிம்பல "நந்தசிறி" இல்லத்தில் வசிக்கும் திரு. ஜே.கே.ஏ. குணபால என்பவர் மாத்தறை, திஹகொட பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள "மிதெல்ல கும்புற" என அறியப்படுகின்ற வயற் காணியின் குத்தகை விவசாயியாக நீண்ட காலம் கமத்தொழிலில் ஈடுபட்டு வருவதால், இவர் மேற்படி வயற் காணிக்கு காணி உறுதியைப் பெற்றுக்கொள்ளத் தேவையான சகல ஆவணங்களையும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளபோதும், இதுவரை அந்தக் காணி உறுதி வழங்கப்படவில்லை என்பதை அறிவாரா என்பதையும்;

(ii) காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளர் காணி உறுதியை வழங்குவதற்காக திரு.குணபால என்பவருக்குப் பிரதிகொண்டதாக அனுப்பியுள்ள, 2013.04.26ஆந் திகதிய மற்றும் 15/6/168/மா/1-111ஆம் இலக்க கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைபாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையிலும், இதுவரை அந்த வயற் காணிக்கான உறுதி வழங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி வயற் காணிக்கு உறுதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-05

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks