01

E   |   සි   |  

 திகதி: 2023-03-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1633/2023: Details of Carpeted roads

1633/2023

கௌரவ (திருமதி) முதிதா பிரிஸான்தி,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) நாட்டில் 100,000 கி.மீ. வீதிகளை காப்பற் இடும் திட்டத்தின் கீழ் இதுவரை காப்பற் இடப்பட்டுள்ள வீதிகளின் நீளம்;

(ii) மேற்படி திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதிகளின் நீளம்;

(iii) அவற்றில் இதுவரை பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள வீதிகளின் நீளம்;

கிலோமீற்றர்களில் எத்தனை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) கொடக்கவெல பிரதேச செயலகப் பிரிவில், கொடக்கவெல முதல் பிபிலேகம வரையான வீதியில் 5 கிலோமீற்றர்களை காப்பற் இட்டு அபிவிருத்தி செய்யும் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன என்பதையும்;

(ii) இதன் காரணமாக மேற்படி பிரதேச மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(இ) (i) மேற்படி வீதியின் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;

(ii) ஒப்பந்த உடன்படிக்கைக்கு அமைய பணிகள் நிறைவு செய்யப்படவுள்ள திகதி யாது என்பதையும்;

(ii) மேற்படி வீதியின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-21

கேட்டவர்

கௌரவ (திருமதி) முதிதா பிரிஸான்தி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks