01

E   |   සි   |  

 திகதி: 2023-04-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

1313/2023: Gal-oya nawodaya project

1313/2023

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பிரான்ஸ் அரசாங்கத்தின் கடனுதவித் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் கிழக்கு மாகாணத்தின் முந்தானையாறு ஆற்று வடிநில கருத்திட்டத்திற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளின் கீழ் 02 நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்கப் படவுள்ளன என்பதையும்;

(ii) மேற்குறிப்பிட்ட கருத்திட்டத்திற்கு கடனுதவி வழங்கும் தரப்பினர், அந்த நீர்த்தேக்கங்களில் களிமண் அணைகளை அமைப்பதற்கு வெளிநாட்டு ஆலோசகர்களின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றனர் என்பதையும்;

(iii) ஆயினும், நிபுணத்துவ அறிவுடைய பொறியியலாளர்கள் இந்நாட்டில் உள்ளனர் என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) வெளிநாட்டு ஆலோசகர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென கடன் வழங்கும் தரப்பினரால் அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) கிழக்கு மாகாணத்தில், கல்லோயா நவோதய கருத்திட்டத்தின் அனைத்து நிதியும் செலவிடப்பட்டுள்ள போதிலும் இயந்திர வேலைகள் உட்பட சில வேலைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமையால் இக்கருத்திட்டத்தின் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்படவில்லையென்பதை அறிவாரா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-04-06

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks