01

E   |   සි   |  

 திகதி: 2012-12-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

1950/2012: ரஜரட்ட ஊடகவியலாளர்களுக்கு வீடுகள் : முறைமை

1950/ ’11

கெளரவ புத்திக பதிரண,— வெகுசன ஊடக, தகவல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2012 ஆம் ஆண்டில் அனுராதபுரம் மாவட்டத்தின் ஒயாமடுவ பிரதேசத்தில் நடைபெற்ற “தயட்ட கிருல” தேசிய கண்காட்சியுடன்  இணைந்ததாக ரஜரட்ட பிரதேசத்தின் 15 ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டமொன்று நடைபெற்றதென்பதையும்;

(ii) வீடு பெறுநர்களைத் தெரிவு செய்கின்றபோது பகிரங்கத் தன்மையற்ற விதத்தில் செயலாற்றியுள்ளதாக ஊடகவியலாளர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர் என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி வீடு பெறுனர்களை தெரிவு செய்வதற்காக பின்பற்றப்பட்ட முறையியல் யாதென்பதையும்;

(ii) மேற்படி வேலைத்திட்டத்தின் மூலம் ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை வழங்குகின்றபோது அநீதி ஏதும் இடம்பெற்றிருப்பின் அந்நிலைமையை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iii) அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுமெனில், அதற்காக பயன்படுத்தப்படும் முறையியல் யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-12-05

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

வெகுசன ஊடக, தகவல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු කෙහෙළිය රඹුක්වැල්ල  මහතා (ජනමාධ්‍ය හා ප්‍රවෘත්ති අමාත්‍යතුමා)

(மாண்புமிகு கெஹெலிய ரம்புக்வெல்ல - வெகுசன ஊடக, தகவல் அமைச்சர்)

(The Hon. Keheliya Rambukwella - Minister of Mass Media and  Information)

ගරු කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙ‍සේයි.

(අ) (i) එවැනි වැඩසටහනක් ජනමාධ්‍ය හා ප්‍රවෘත්ති අමාත්‍යාංශය මඟින් ක්‍රියාත්මක කර නොමැත.

(ii)    අදාළ නොවේ.

(ආ)    (i)     අදාළ නොවේ.

          (ii)    අදාළ නොවේ.

          (iii)   අදාළ නොවේ.

(ඇ)    අදාළ නොවේ.

 

 

பதில் தேதி

2012-12-05

பதில் அளித்தார்

கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks