01

E   |   සි   |  

 திகதி: 2021-11-13   பதிலளிக்கப்பட்டவைகள் 

1908/2021: Misconduct details from year 2015-2019 in Trade and Investment Policy department

1908/2021

கௌரவ ஜகத் புஷ்பகுமார,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களத்தில் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஏதேனும் முறைகேடு, முறையற்ற நியமனம், ஊழல் செயற்பாடு அல்லது சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்றுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அவை வெவ்வேறாக யாவையென்பதையும்;​

(iii) மேற்குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு செயற்பாட்டின் விளைவாகவும் அரசாங்கம் இழந்துள்ள நிதி, சொத்து மற்றும் மனித வளங்களின் பெறுமதி வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) மேற்படி (அ)(i) இல் குறிப்பிடப்பட்ட செயற்பாடுகளுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய அலுவலர்களை அடையாளம் காண்பதற்கென புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

(ii) பொறுப்புக்கூற வேண்டிய அலுவலர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பின், அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(iii) அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிடின், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(iv) அவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(v) எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய இத்தகைய ஊழல் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-11-13

கேட்டவர்

கௌரவ ஜகத் புஷ்பகுமார, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks