logo

03

E   |   සි   |  

 திகதி: 2021-11-13   பதிலளிக்கப்பட்டவைகள் 

1590/2021: Water supply issues in Kaduwela, Hokandara North

1590/2021

கௌரவ விஜித ஹேரத்,— நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கடுவலை, ஹோக்கந்தர வடக்கு பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களிலுள்ள பெரும் எண்ணிக்கையிலான வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள நீர் இணைப்பு காலை வேளைகளில் பாதிக்கப்படுவதோடு அது மு.ப 10.00 மணி அளவிலேயே இயல்பு நிலைக்கு வருகின்றதென்பதையும், பி.ப 5.00 மணியளவில் மீள தடைப்படும் நீர் இணைப்பு இரவு 9.00 மணிக்குப் பின்னரே இயல்பு நிலைக்கு வருகின்றதென்பதையும்;

(ii) விடுமுறை நாட்களில் அநேகமான சந்தர்ப்பங்களில் பகல் முழுவதிலும் நீர் கிடைப்பதில்லை என்பதையும்;

(iii) குறிப்பாக ஒரு மாடியையேனும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு இப்பிரச்சினை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென்பதையும்;

(iv) இவ் விடயம் தொடர்பாக நீர் வழங்கல் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை தீர்வெதுவும் கிடைக்கவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்குறிப்பிட்ட பிரதேச மக்களுக்கு நாள் முழுவதும் தொடர்ச்சியாக நீர் கிடைக்கும் வகையில் இப் பிரச்சினையை துரிதமாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

(ii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-11-13

கேட்டவர்

கௌரவ விஜித ஹேரத், பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks