01

E   |   සි   |  

 திகதி: 2021-06-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0970/2021: அம்பாறை மாவட்டம்: மீன்பிடித் துறைமுகம் அமைத்தல்

----

கேட்கப்பட்ட திகதி

2021-06-22

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி எஸ். எம். எம். முஸ்ஸாரப், பா.உ.

அமைச்சு

கடற்றொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ)    (i)      கடற்றொழில் அமைச்சின் கீழுள்ள, இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத் தினால் நிர்வகிக்கப்படுகின்ற, 22 கடற்றொழில் துறைமுகங்கள் தற்போது செயற்பட்டு வருகின் றன. வெள்ளமன்கர பகுதியில் கடற்றொழில் துறைமுகமொன்று நிர்மாணிக்கப்பட்டு, அதன் பணிகள் பூர்த்தியடையும் தருவாயில் உள்ளது. மேலும், களமெட்டிய மற்றும் கந்தர                        ஆகிய பகுதிகளில் இரு கடற்றொழில் துறை முகங்கள் நிர்மாணிக்கப்பட்டு  வருகின்றன.                  யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை மற்றும் குருநகர் ஆகிய பகுதிகளிலும் மன்னார் பேசாலை பகுதியிலும் மூன்று கடற்றொழில் துறைமுகங்களை நிர்மாணிக்கின்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

        (ii) கடற்றொழில் அமைச்சின்கீழ் அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு கடற்றொழில் துறை முகமும் தற்போதைய நிலையில் இல்லை. ஒலுவில் கடற்றொழில்  துறைமுகமானது வர்த் தக துறைமுகத்துடன் இணைந்து நிர்மாணிக் கப்பட்டுள்ளது. இது, இலங்கை துறைமுக அதிகாரசபையின்கீழ் நிர்வகிக்கப்பட்டு வரு கின்றது. மேற்படி துறைமுகங்களை கடற் றொழில் அமைச்சின்கீழ் கொண்டுவந்து, பாரிய கடற்றொழில் துறைமுகமாக்குவதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

       (iii) கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் கடற்கரை பகுதியானது நேர் கடற்கரை - sraight beach - பகுதியாக இருப்பதால் அதன் தன்மைக்கேற்ப நிலையாக பாராமரிக்கக்கூடிய, அதாவது அதிகளவு மணல் நிரம்பாத கடற்றொழில் துறைமுகமொன்றை நிர்மாணிப்பதெனில் அதற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும் விரிவான திட்டமொன்றை வகுப்பதற்கும் முன்னர் அதற்கான ஒழுங்கமைப் பான ஆய்வினை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகின்றது. தேர்ந்தெடுக்கப்படுகின்ற இடமானது குறிப்பிடத்தக்க செலவினத்துடன் கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு ஏதுவாக இருத்தல் வேண்டும். அத்துடன், சமூக, பொருளாதார சூழல் மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை உள்ளடக்கியதாகவும் இருத்தல் அவசியமாகும்.

மேற்படி கடற்றொழில் துறைமுகமொன்றை நிர்மாணித்ததன் பின்னர் மணல் நிரப்புதல், கடலரிப்பு போன்ற தீமையான பாதிப்புகளின்றி அதனைச் செயற்படுத்தும் வகையில் தகுந்த திட்டமொன்று வகுக்கப்படவேண்டியுள்ளது. நிரம்புகின்ற மணலை அகற்றுதல் மற்றும் கடலரிப்பினைத் தடுத்தல் போன்ற செயற்பாடு களை இயந்திரங்கள் மூலமாக மேற்கொள்ள முடியும். எனினும், அதற்கென பாரிய செலவினங்களை மேற்கொள்ளவேண்டி வரும். அத்தகைய செலவினங்களை  கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம் பெறுகின்ற வரு மானத்தால் ஏற்க முடியாதுள்ளதால், அதனைப் பொறுப்பேற்க கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்தால் இயலாதுள்ளது.

மேற்படி விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இந்த ஆய்வின் முடிவுகளின் பிரகாரம் எதிர்கால நடவடிக்கைகள் அமையும்.

        (iv) பொத்துவில் பகுதியானது சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கென அரசாங்கத்தினால் கொள்கை ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி என்பதால், அங்கு கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிக் கின்றபோது இயற்கை கடற்கரையில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் மற்றும் ஏனைய பாதிப்புக்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. ஒலுவில் துறைமுகத்தை நிர்மாணித்ததன் பின்னர், அப்பகுதிக் கடற் கரைக்கு ஏற்பட்டுள்ள, ஏற்பட்டு வருகின்ற பாரிய பாதிப்புகளைக் கருத்தில் கொள்கின்றபோது, கடற்றொழில் துறைமுகங்களை நிர்மாணிப்பதில் நாம் அதிக அவதானங்களைச் செலுத்த வேண்டியுள்ளது. பொத்துவில் பகுதியில் கடற்றொழில் துறைமுகமொன்றை அமைப்பதற் கான திட்டம் எம்மிடம் இருக்கின்றது. அதற்குத் தகுதியான இடத்தை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

(ஆ)    (i) இலங்கை கடற்றொழில் கூட்டுத் தாபனத்தின் கல்முனை நிறைவேற்றுக் கிளையானது தற்போது கொள்முதல் செய்யும் நிலையமாகவே செயற்பட்டு வருவதுடன், விரைவில் விற்பனை நிலையமாகவும் மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின் றன. இதன்மூலம் சாய்ந்தமருது, வாழைச்சேனை, அக்கரைப்பற்று, ஒலுவில் போன்ற கடற்கரைப் பகுதிகளில் கடற்றொழிலாளர்களிடமிருந்து மீன்களைக் கொள்வனவு செய்கின்றனர். இங்கு கொள்வனவு செய்யப்படுகின்ற மீன் வகைகள் கிழக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சின் கீழுள்ள, அதாவது, மட்டக்களப்பு, அம்பாறை, அக்கரைப்பற்று மருத்துவமனைகள், அஷ்ரஃப் மருத்துவமனை மற்றும் அம்பாறை தாதியர் பயிற்சிக் கல்லூரி போன்றவற்றுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. மேலும், வாகனங்களின் மூலமாகவும் சியம்பலாண்டுவ, அம்பாறை, மஹவ போன்ற பல்வேறு இடங்களில் நடமாடும் விற்பனைச் சேவையும் நடாத்தப்பட்டு வருகின்றது. அத்துடன், நாடு முழுவதிலுமுள்ள இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பப்படுகின்றது. மேலும், அம்பாறையில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் விற்பனைக் கிளையொன்றும் செயற்பட்டு வருகின்றது.

       (ii) விசேடமான காரணங்கள் எதுவும் இல்லை. கல்முனை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களை உள்ளடக்கியதாக விரைவில் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் விற்பனைக் கிளைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

(இ)  ஏற்புடையதன்று.

பதில் தேதி

2021-06-22

பதில் அளித்தார்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks