01

E   |   සි   |  

 திகதி: 2020-12-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0602/2020: ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்த விசேட சனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை: விதப்புரைகள்

602/2020

கெளரவ (டாக்டர்) உபுல் கலப்பத்தி,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சுகாதார அமைச்சு சார்ந்ததாக இடம்பெற்றுள்ள பாராதூரமான ஊழல்கள் மற்றும் ஏராளமான முறைகேடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப் பட்டதாக ஊடகங்களில் வெளியானது என்பதையும்;

(ii) மேற்படி விசாரணைகளில் புற்றுநோய் எதிர்ப்பு ஔடதங்களை கொள்வனவு செய்யும் கேள்விப்பத்திரம், புலுக்லொக்சிலின் (Flucloxacillin) எனும் நுண்ணுயிர்க் கொல்லி ஔடதங்களைக் கொள்வனவு செய்யும் கேள்விப் பத்திரம் மற்றும் நெவில் பர்னாந்து வைத்தியசாலையை அரசாங்கத்துக்கு பொறுப்பேற்றது தொடர்பிலான அரச நிதி துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி விசாரணைகளில் வெளியான தகவல்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விதப்புரைகள் யாதென்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கப்பட்டுள்ளதா;

(ii) ஆமெனில், குறிப்பிட்ட சனாதிபதி ஆணைக்குழு அறிக்கைக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ள விதப்புரைகள் யாவை ;

(iii) அதன்போது எத்தகைய நபர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதற்கு விதப்புரை செய்யப்பட்டுள்ளது;

(iii) மேற்படி விதப்புரைகள் தொடர்பில் அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் யாவை

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-12-10

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) உபுல் கலப்பத்தி, பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-12-10

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks