01

E   |   සි   |  

 திகதி: 2020-11-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0518/2020: மட்டக்களப்பு ஐஸ் தொழிற்சாலை: புனரமைப்பு

518/2020

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— கடற்றொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 1973 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டு இற்றைக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக செயலற்று காணப்படும் கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தை அண்மித்து நிறுவப்பட்டுள்ள ஐஸ் தொழில்சாலையை மீண்டும் புனரமைத்து இயக்க வேண்டுமென்பதையும்;

(ii) இதன் மூலம் மீனவப் படகுகள் மற்றும் கரைவலையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவரும் உள்நாட்டு மீனவர்களுக்கு நன்மை ஏற்படும் என்பதோடு இவர்களது வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுமென்பதையும்;

(iii) இங்கு காணப்படும் களஞ்சிய வசதிகள் காரணமாக போதனா வைத்தியசாலைக்கும் வேறு நிறுவனங்களுக்கும் தேவையான கடலுணவை களஞ்சியப்படுத்தி விநியோகிக்க முடியுமென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) மேற்படி ஐஸ் தொழில்சாலையை புனரமைத்து மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-06

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

கடற்றொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ)    (i) -      ஆம்.

           (ii) -     ஆம்.

            (iii) -    ஆம்.

                     இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்குரிய மேற்படி ஐஸ் தொழிற்சாலை மற்றும் குளிரூட்டல் அறைகொண்ட கட்டடமும் கடற்றொழில் மற்றும் நீரியல்         வழங்கல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் அலுவலகமும் ஒரே காணியில் அமைந்துள்ளன. இங்கு இயங்கிவந்த ஐஸ் தொழிற்சாலை மற்றும் குளிரூட்டல் அறைகொண்ட கட்டடம் தற்போது வெறுமையாக உள்ளதுடன், அங்கிருந்த சகல இயந்திரங்களும் அப்போதிருந்த முகாமைத்து வத்தினால் விலைமனுக் கோரப்பட்டு சிதைவுப் பொருட்களாக அதாவது பழைய இரும்புகளாக விற்கப்பட்டுள்ளன. மேற்படி தொழிற்சாலைக் குரிய குளிரூட்டல் அறையின் கொள்ளளவு சுமார் 1,000 தொன்னைக் கொண்டதாக விருந்துள்ளது. அதேநேரம், மேற்படி தொழிற்சாலைக் கட்டடம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆந் திகதி தீப்பிடித் துள்ளதாகவும் தெரியவருகின்றது.

(ஆ) - ஆம்.

மேற்படி ஐஸ் தொழிற்சாலையையும் குளிரூட்டல் அறையினையும் புனரமைத்து மீண்டும் இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுவருகின்றோம். அதன் ஆரம்பகட்ட ஏற்பாடாக அதற்கான திட்டமதிப்பீடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி ஐஸ் தொழிற்சாலையில் ஏற்கெனவே 100 ஐஸ் கட்டிகளே அதாவது, 5 தொன் அளவே நாளாந்த உற்பத்தியாக இருந்துள்ளது. இத்தொழிற்சாலையை நாங்கள் நாளாந்தம் 1000 ஐஸ் கட்டிகளை அதாவது 50 தொன் உற்பத்தியை மேற்கொள்ளத்தக்க வகையில் அமைக்கவுள்ளோம். இதனூடாக அப்பகுதிக் கடற்தொழிலாளர்களுக்குக் கட்டுப்பாடுகள் இன்றி நியாயமான விலையில் இலகுவாக ஐஸ்கட்டிகளை பெற்றுக்கொள்ள முடிவதுடன், குளிரூட்டல் அறையை மீள இயக்க வைப்பதன்மூலம் கடலுணவு உற்பத்திகளை இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின்மூலமாகக் கொள்வனவு செய்து, களஞ்சியப்படுத்தி மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் போன்ற அரச நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் நியாயமான விலையில் தரமிக்க வகையில் விற்பனை செய்வது எமது

நோக்கமாக உள்ளது. இதன்மூலம் அப்பகுதிக் கடற்தொழிலாளர்கள் பெரும் நன்மைகளை எட்டமுடியும் என்பதனை உணர்ந்துள்ளேன். இந்த விடயம் தொடர்பில் அப்பகுதிகளிலிருந்து பலரும் எனக்கு எடுத்துரைத்துள்ளனர். கூடியவிரைவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என நம்புகின்றேன். இதுபோன்ற எமது கடற்தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கின்ற திட்டங்களையே நாம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கியிருக்கின்றோம்.

(இ) ஏற்புடையதல்ல.

பதில் தேதி

2020-12-05

பதில் அளித்தார்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks