பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
517/2020
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— கடற்றொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடற்றொழிலில் சுருக்கு வலையை பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், மீனவர்கள் இதனை உரிய வகையில் பயன்படுத்தாமையினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடற்கரை அண்மித்த பிரதேசங்களில் மீன்பிடிக்கும் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதெனவும்;
(ii) இதனை கட்டுப்படுத்துவது மிகச் சிரமமாக இருப்பதால் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது கட்டாயமென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) மேற்படி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்படவுள்ள நடைமுறைகள் யாவை என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-11-05
கேட்டவர்
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.
அமைச்சு
கடற்றொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(அ) (i) ஆம்.
(ii) ஆம்.
(ஆ) ஆம்.
சுருக்கு வலையைப் பயன்படுத்திக் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு எமது நாட்டில் ஒவ்வொரு கடற் பகுதிகளுக்குமெனக் குறிப்பிட்ட கடல் மைல் தூரங்கள் வழங்கப்பட்டும், பயன்படுத்தப்படவேண்டிய வலை களின் கண் அளவினைக் குறிப்பிட்டும் ஏற்கனவே அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன. எனினும், மேற்படி ஒழுங்குவிதிகளை மீறிக் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் குறித்துத் தொடர்ந்தும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இவ்வாறான முறைப்பாடு களின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டவர்களைத் தடுத்து நிறுத்தியபோது, அவர்கள் நீதிமன்றத்தை நாடியதன் காரணமாக, நீதிமன்றத் தின் தீர்ப்பினையடுத்து அவர்களுக்கு மீண்டும் அத்தொழிலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
முல்லைத்தீவுப் பகுதியிலும் இப்பிரச்சினை காரணமாகச் சுருக்குவலைத் தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டு, அதற்கெதிரான சிறு தொழிலாளர்களின் போராட்டத்தின் பின்னர் அத் தொழிலில் ஈடுபடுவதைத் தற்காலிகமாக இடை நிறுத்திய பின்னர், அந்தச் சுருக்குவலைக் கடற்றொழி லாளர்களும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் என்பது டன், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும், தற்போது 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆந் திகதிய 437/46ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 1986ஆம் ஆண்டின் சுருக்குவலை - Purse seine சம்பந்தமான ஒழுங்குவிதிக் கோவையின் விதிமுறைகளின் பிரகாரம் அதனை மீறிச் சுருக்குவலைச் செயற்பாட்டில் ஈடுபடும் கடற்றொழில் படகுகளுக்கு எதிராக உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்துவரும் கடற் றொழில், நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரி களுக்கு இலங்கைக் கடற்படையினரும் இலங்கைக் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினரும் இலங்கைக் காவல் துறையினரும் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.
இத்தகைய நிலையில், சுருக்குவலை மட்டுமல்லாது, எமது கடல் வளங்களுக்கும் ஏனைய கடற் றொழிலாளர்களுக்கும் பாதிப்புக்களை உண்டு பண்ணுகின்ற மற்றும் தரமான கடலுணவு அறுவடை களைப் பின்தள்ளுகின்ற முறைமைகளைத் தடை செய்கின்ற ஒழுங்குவிதிகள் தொடர்பில் எனது அமைச்சு தற்போது தேசியரீதியிலான கடல் வள ஆய்வுகளுக்கிணங்க வலுவானதும் நியாயமானது மான ஒழுங்குவிதிகளை வகுத்து வருகின்றது. இந்த ஒழுங்குவிதிகளைச் சட்டமாக்குவதற்கும் அதை முறையாகச் செயற்படுத்துவதற்கெனப் போதிய ஆளணிகளை உள்வாங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதிய 1907/47ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ளதன் பிரகாரம், ஆழ் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற பலநாட் கலங்கள் செய்மதித் தொழில்நுட்பத் தகவல்களின் அடிப்படையில் கண்காணிக்கின்ற கருவி - VMS இன்மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
ஆனால், வெளியிணைப்பு இயந்திரத்துடன் கூடிய இயந்திரக் கடற்றொழில் படகுகளின்மூலம் சுருக்கு வலைமூலமாகக் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற நடவடிக்கைகளை மேற்படி கருவியைக் கொண்டு கண்காணிப்பதானது இதற்குள் உள்ளடங்காமை யினால், சுருக்குவலை உள்ளிட்ட
ஏனைய தடை செய்யப்பட்ட முறைமையிலான கடற்றொழில் நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிப்புக்களை மேற்கொள்வதற்கு நவீன தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்துக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அவதானம் செலுத்தி வருகின்றது. இதற்கமைய இதற்குத் தேவையான ஒழுங்குவிதிக் கோவை வரைபு ஒன்றை வகுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள துடன், இந்த ஒழுங்குவிதிக் கோவையை விரைவில் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் தீர்மானிக்கப் பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகள் அமுலுக்கு வரும் நிலையில், சுருக்குவலை உட்படத் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அனைத்துக் கடற்றொழில் படகுகளையும் இதன்மூலம் முறையாகக் கண்காணிக்க முடியும் என்பதுடன், உரிய வகையில் சுருக்கு வலைப் பயன்படுத்துதலை வலுப் படுத்துவதற்கும் மற்றும் அதனை மேற்கொள்ளாத கடற்றொழில் படகுகளுக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இதன்மூலம் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
(இ) ஏற்புடையதன்று.
பதில் தேதி
2020-12-02
பதில் அளித்தார்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks