01

E   |   සි   |  

 திகதி: 2020-09-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0247/2020: ஹந்தானை தோட்ட "உதா கம்மான வீட்டுத் திட்டம்": விபரம்

247/2020

கெளரவ வேலு குமார்,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான, கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஹந்தானை தோட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் "உதா கம்மான வீட்டு திட்டம்" ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா?

(ஆ) மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஹந்தானை தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள —

(i) ஒவ்வொரு உதா கம்மான வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை;

(ii) திட்டத்தில் உள்ளடங்கும் வீடுகளின் எண்ணிக்கை;

தனித் தனியாக யாவையென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) வீடொன்றை நிர்மாணிப்பதற்காக வீட்டுப் பயனாளி ஒவ்வொருவருக்கும் —

(i) வழங்கப்படுமென இணங்கிய மொத்தத் தொகை;

(ii) வழங்கப்படும் மொத்தத் தொகையில் கடன் தொகை;

(iii) வழங்கப்படும் மொத்தத் தொகையில் உதவித் தொகை;

(iv) இதுவரை வழங்கப்பட்டுள்ள தொகை;

தனித் தனியாக எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) ஒவ்வொரு வீட்டுப் பயனாளிக்கும் உரிய எஞ்சியத் தொகையை வழங்கி இந்த வீட்டுத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-22

கேட்டவர்

கௌரவ வேலு குமார், பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-09-22

பதில் அளித்தார்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks