01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0833/2019: Displaced people Vavuniya 2009- 2012

833/ '19

கௌரவ கே. காதர் மஸ்தான்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பயங்கரவாதத்திற்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது வவுனியா மாவட்டத்திலுள்ள மெனிக்பாம் இடம்பெயர்ந்தோர் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நன்மைகருதி பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களால் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

(ii) அக்காலப் பகுதியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளால் மெனிக்பாம் முகாமினது நடவடிக்கைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை என்னவென்பதையும்;

(iii) மேற்கூறப்பட்ட வாகனங்களின் வகைகளும் அவற்றின் பதிவிலக்கங்களும் என்னவென்பதையும்;

(iv) மேற்கூறப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியோர் யாரென்பதையும் ;

(v) மேற்கூறப்பட்ட வாகனங்களைத் தற்போது பயன்படுத்துவோர் யாரென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-18

கேட்டவர்

கௌரவ கே.காதர் மஸ்தான், பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks