01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0676/2019: Alleged Fraud in discontinued NELSIP project funded by the ADB to develop Kekirawa sports ground

676/ '19

கௌரவ சந்திம கமகே,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீடுகளின் கீழ் 368 இலட்சம் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டு NELSIP கருத்திட்டத்தின் மூலம் கெக்கிராவ விளையாட்டு மைதானம் அபிவிருத்தி செய்யப்பட்டது என்பதையும்;

(ii) கருத்திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகளின் காரணமாக கருத்திட்டத்தை கைவிட நேர்ந்தது என்பதையும்;

(iii) கெக்கிராவ பிரதேச இணைப்பாக்கக் குழுவினால் அனுராதபுரம் உள்ளூராட்சி ஆணையாளர் மூலம் மற்றும் NELSIP கருத்திட்டத்தின் பணிப்பாளரின் மூலம் தரக் கட்டுப்பாடு, தரநியமம் மற்றும் செலவிடப்படுகின்ற தொகை தொடர்பாக அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ள போதிலும் அத்தகையதொரு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்பதையும்;

(iv) மேற்படி கருத்திட்டத்தில் சுமார் 35 இலட்சம் ரூபாவிலான ஊழல் மோசடி இடம் பெற்றுள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) உள்ளூராட்சி ஆணையாளர், பிரதேச சபைத் தவிசாளர், உப தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் என்போரின் தேவையின் அடிப்படையில் மேற்படி விளையாட்டு மைதானத்தினை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்குவதற்கும் விசாரணை நடவடிக்கைகள் முடிவுறுத்தப்படுவதற்கு முன்னர் இசைக் கச்சேரி ஒன்றினை நடாத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது என்பதையும்;

(ii) இச்செயன் முறையின் மூலம் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை மூடி மறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும்;

அவர் அறிவாரா?

(இ) விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கும் விளையாட்டு மைதானத்தினை பொது மக்களுக்கு ஒப்படைக்கும் வரை பயன்படுத்தாமல் தாமதப்படுத்துவதற்கும் கட்டளையிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-11

கேட்டவர்

கௌரவ சந்திம கமகே, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks