01

E   |   සි   |  

 திகதி: 2019-03-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

0532/2019: கொரியாவுக்குத் தொழிலுக்குச் செல்லும் ஊழியர்கள்: பாதுகாப்பு வைப்பு

532/ '19

கௌரவ பிமல் ரத்னாயக்க,— தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொரியாவில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினூடாக செல்லும் ஊழியர்களிடமிருந்து ரூபா ஐந்து இலட்சம் பணத் தொகை பாதுகாப்பு வைப்பாக பெற்றுக் கொள்ளப்படுகின்றதென்பதையும்;

(ii) இதன் காரணத்தினால் கொரியா நாட்டில் தொழில் வாய்ப்புகளுக்காக செல்லும் பொருளாதார கஷ்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) இச்சட்டத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-12

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-12

பதில் அளித்தார்

கௌரவ ஹரின் பிரனாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks