01

E   |   සි   |  

 திகதி: 2019-06-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0450/2019: நாவலப்பிட்டி பொதுச் சந்தை: கடை உரிமையாளர்களிடமிருந்து அறவிட்ட வருடாந்த வரி

450/ '19

கெளரவ மஹிந்தானந்த அளுத்கமகே,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நாவலப்பிட்டிய நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாவலப்பிட்டி நகரத்தில் பொதுச் சந்தையொன்று நிர்மாணிக்கப் பட்டுள்ளதை அவர் அறிவாரா என்பதையும்;

(ii) பொதுச் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணிக்கு மற்றும் நிர்மாண நடவடிக்கைகளுக்கு நிதி செலவுகளை மேற்கொண்ட நிறுவனங்கள் யாவை என்பதையும்;

(iii) நாவலப்பிட்டி நகர சபையினால் இந்தப் பொதுச் சந்தைக்கு ஆரம்ப ஆண்டில் கடை உரிமையாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட வருடாந்த வரித் தொகை யாது என்பதையும்;

(iv) தற்போதைய நகர சபையினால் வருடாந்த வரித் தொகை 1500% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

(v) ஒரே தடவையில் வரித் தொகை 1500% இனால் அதிகரிக்கப் பட்டுள்ளதனால் வியாபாரிகள் மேற்படி குத்தகைத் தொகையை செலுத்த முடியாதுள்ளனர் என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

(vi) இந்த நிலைமை பற்றி மீளாய்வு செய்து மீண்டும் நியாயமான வரித் தொகையை அறவிட்டுக் கொள்வதற்கு நாவலப்பிட்டி நகர சபைக்கு அறிவுரை வழங்கப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-07

கேட்டவர்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-06-07

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks