01

E   |   සි   |  

 திகதி: 2018-09-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1108/2018: 1998 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இடம்பெற்ற பதவியுயர்வு: பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கல்

1108/ '18

கெளரவ விஜித ஹேரத்,— அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 1998 ஆம் ஆண்டில் இலங்கை நிருவாக சேவை, வகுப்பு இரண்டின் IIஆம் தரத்திற்கு திறமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி வெற்றிடங்களைப் பூர்த்தி செய்தபோது சுமார் பத்து அலுவலர்களுக்கு அநீதி நேர்ந்துள்ளது என்பதையும்;

(ii) தாபன விதிக் கோவையின் ஏற்பாடுகள் மற்றும் பொது நிருவாக சுற்றறிக்கைகளைப் கவனத்திற்கொள்ளாது, சேவை பிரமாணக் குறிப்பின் பதவி உயர்வு விதிமுறைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இரட்டை பதவி உயர்வாகக் கருதி பரீட்சையொன்றை நடத்துவதற்காக, வெற்றிடம் ஏற்பட்டு சுமார் ஏழு ஆண்டுகள் தாமதித்து பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு அநீதி நேர்ந்துள்னது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) எவரேனும் அலுவலர் ஒருவரின் சேவைக் காலம் முடிவுக்கு வரும்போது அல்லது ஓய்வு பெற்ற பின்னர் இந்த பதவி உயர்வு வழங்கப்படுவதால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அதில் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதையும்;

(ii) இவ்வாறு அநீதி நேர்ந்துள்ள நபர்களுக்கு நீதி வழங்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-19

கேட்டவர்

கௌரவ விஜித ஹேரத், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2018-09-19

பதில் அளித்தார்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks