01

E   |   සි   |  

 திகதி: 2018-08-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0533/2018: Neelawalagama, Kandy families engaged in traditional jewelry industry

2010/'17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கண்டி மாவட்டத்தில் "நீலவல கிராமம்" பாரம்பரிய ஆபரணங்கள் கைத்தொழிலை மிகவும் முன்னேற்றகரமான விதத்தில் மேற்கொண்டுவந்த ஒரு பண்டைய கிராமம் என்பதை அறிவாரா;

(ii) தங்கம் மற்றும் வெள்ளிக் கைத்தொழிலின் மூலம் வாழ்க்கை நடத்திய இக் கிராமத்தின் குடும்பங்களில் இன்றளவில் 03 குடும்பங்கள் மட்டுமே இக் கைத்தொழிலில் ஈடுபடுகின்றன என்பதை ஏற்றுக்கொள்வாரா;

(iii) உள்நாட்டுக் கைத்தொழிலாளர்களுக்கு கைகொடுப்பதற்காக அன்று லக்சல தலையீடு செய்ததன் காரணமாக நீலவல கிராமத்தின் தங்க, வௌ்ளிப் பண்டங்களுக்கு பாரிய கேள்வி நிலவிய போதிலும், இன்றளவில் லக்சல, ஒருசில வர்த்தகர்களின் நிறுவனமாக மாறியுள்ளமையின் காரணமாக இக் கைத்தொழில் கடும் வீழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளதென்பது அக் கிராமத்தின் கைத்தொழிலாளர்களது கருத்தாகும் என்பதை ஏற்றுக்கொள்வாரா;

(iv) ஆகவே, நீலவல கிராமத்திற்கே தனித்துவமான பண்டைய செதுக்கல் வேலைப்பாடுகளுடனான தங்கம் மற்றும் வெள்ளிக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்குமா;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-09

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks