logo

E   |   සි   |  

17/2002 : நில அளவை

சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 2002-10-04



தொடர்புடைய தகவல்கள்

2010-11-09

நில அளவை

காணி, காணி அபிவிருத்தி அமைச்சர்,—  நில அளவைச் சட்டத்தின் கீழான அறிவித்தல்,— 2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, நில அளவைச் சட்டத்தின் 39ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 65ஆம் பிரிவின் கீழ், காணி, காணி அபிவிருத்தி, குடியிருப்பு மற்றும் போர் வீரர் நலனோம்புகை அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்டு 2005, நவெம்பர் மாதம் 23 ஆம் திகதிய 1420/20 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட “2005 நில அளவைச் சபை (பதிவு) பிரமாணத்தின்” 2(2) ஆம் பந்தியை திருத்துவதற்காக 2010, ஏப்பிரல் மாதம் 12 ஆம் திகதிய 1649/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும், 2010.11.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான அறிவித்தல் அங்கீகரிக்கப்படுமாக.

 

2010-10-19

நில அளவை

2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நில அளவைச் சட்டத்தின் 39 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 65 ஆம் பிரிவின் கீழ், காணி, அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்டு 2005 நவம்பர் மாதம் 23ஆம் திகதிய 1420/20  ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட “2005 நில அளவை” (பதிவு) பிரமாணத்தின் 2(2) ஆம் பந்தியை திருத்துவதற்காக 2010 யூன் மாதம் 22 ஆம் திகதிய 1659/9 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்.

2010-10-19

நில அளவை

காணி, காணி அபிவிருத்தி அமைச்சர்,— நில அளவைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்(இல.1),—  2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நில அளவைச் சட்டத்தின் 41 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 65 ஆம் பிரிவின் கீழ், காணி, அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்டு 2005 நவம்பர் மாதம் 23ஆம் திகதிய 1420/20 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட  “நில அளவைச் சபை  - 2005 (வருடாந்த தொழில் புரியும் உத்தரவுப்பத்திரங்கள்)” பிரமாணங்களின் 3 ஆம் பந்தியை திருத்துவதற்காக 2009 திசெம்பர் மாதம் 18 ஆம் திகதிய 1633 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் 2010.10.19 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான அறிவித்தல் அங்கீகரிக்கப்படுமாக.

 





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks