2026-03-06
செய்தி வகைகள் : அடுத்துள்ள சபை அலுவல்கள்
2026, மார்ச் 6 மற்றும் 17ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
2026 மார்ச் 17 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 5.00 | ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் வேதனம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் – அங்கீகரிக்கப்படவுள்ளது (இத்தீர்மானம் 2026.03.06 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள 3(8) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
2026 மார்ச் 18 புதன்கிழமை |
|
| இத்தினத்தில் பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை) | |
2026 மார்ச் 19 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 2.00 | கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது (2026.03.17 ஆம் திகதிய 138 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்) |
| பி.ப. 2.00 - பி.ப. 5.30 | உலகின் தற்பொது நிலவும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) – தொடரப்படவுள்ளது |
2026 மார்ச் 20 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 5.30 | உலகின் தற்பொது நிலவும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி (எதிர்க்கட்சி) |
2026-03-20
2026, மார்ச் 19 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 ஏப்ரல் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது. 2026 ஏப்ரல் 07 செவ்வாய்க்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 4.45 (i) உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் 2026.03.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், இச்சட்டமூலத்திற்கு எதிராக அரசியலமைப்பின் 121 ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் எதுவித மனுக்களும் தாக்கல் செய்யப்படாதவிடத்து, இரண்டாம் மதிப்பீட்டிற்காக எடுத்துக் கொள்ளப்படும்)(ii) சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் 2026.03.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், இச்சட்டமூலத்திற்கு எதிராக அரசியலமைப்பின் 121 ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் எதுவித மனுக்களும் தாக்கல் செய்யப்படாதவிடத்து, இரண்டாம் மதிப்பீட்டிற்காக எடுத்துக் கொள்ளப்படும்)(iii) விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளன (இவ்வொழுங்குவிதிகள் 2026.03.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.03.20 அன்று பிரசுரிக்கப்படவுள்ள 3(9) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)(iv) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி – அங்கீகரிக்கப்படவுள்ளன (இவ்வொழுங்குவிதி 2026.03.19 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.03.20 அன்று பிரசுரிக்கப்படவுள்ள 3(9) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)(v) இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளன (இவ்விதிகள் 2026.03.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.03.20 அன்று பிரசுரிக்கப்படவுள்ள 3(9) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) பி.ப. 4.45 - பி.ப. 5.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளைத் திருத்துதல் – அங்கீகரிக்கப்படவுள்ளன(2026.03.19 வெளியிடப்பட்ட 139 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.30 இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2018) – அங்கீகரிக்கப்படவுள்ளது (விவாதமின்றி)(2026.03.19 வெளியிடப்பட்ட 139 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 ஆம் இலக்க விடயம்) 2026 ஏப்ரல் 08 புதன்கிழமை இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை) 2026 ஏப்ரல் 09 வியாழக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 2.00 (i) தரைப்படைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது(ii) கடற்படைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது(iii) வான்படைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது(மேலுள்ள (i.), (ii.) மற்றும் (iii.) ஆகிய ஒழுங்குவிதிகள் 2026.03.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.03.20 அன்று பிரசுரிக்கப்படவுள்ள 3(9) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)(iv) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது(கௌரவ சனாதிபதி அவர்களினால் இத்தீர்மானம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டால், இது எடுத்துக் கொள்ளப்படவுள்ளது) (v) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது(கௌரவ சனாதிபதி அவர்களினால் இத்தீர்மானம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டால், இது எடுத்துக் கொள்ளப்படவுள்ளது) பி.ப. 2.00 - பி.ப. 5.30 2019 ஏப்ரல் 21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) 2026 ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.30 வலுசக்தி அமைச்சர் கௌரவ குமார ஜயக்கொடி அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை(இப்பிரேரணை 2026.03.20 அன்று பிரசுரிக்கப்படவுள்ள 3(9) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் திகதி குறிக்கப்படாத பிரேரணை முன்னறிவித்தல் கீழ் நிரலிடப்பட்டுள்ளது)
2026-02-19
2026, பெப்ரவரி 18 மற்றும் மார்ச் 3 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 மார்ச் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது. 2026 மார்ச் 03 செவ்வாய்க்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது (இக்கட்டளை 2026.02.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.02.20ஆம் திகதி வெளியிடப்படவுள்ள 3(7) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) 2026 மார்ச் 04 புதன்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்) மு.ப. 10.30 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்) மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு(2026.02.18ஆம் திகதிய 131 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் 9 ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் 2026 மார்ச் 05 வியாழக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.30 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒத்திவைப்பு விவாதம் 2026 மார்ச் 06 வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது(2026.02.28 ஆம் திகதிய 2477/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியைப் பார்க்க. பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 ஐ இடைநிறுத்தியதன் பின்னர் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.03.06 ஆம் திகதிய 137 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது ) பி.ப. 5.00 அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது(2026.02.28 ஆம் திகதிய 2477/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியைப் பார்க்க. பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 ஐ இடைநிறுத்தியதன் பின்னர் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.03.06 ஆம் திகதிய 137 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது) பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
2026-02-06
2026, பெப்ரவரி 6ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது. < 2026 பெப்ரவரி 17 செவ்வாய்க்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2026.02.06 ஆம் திகதிய 129 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 82 ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00 தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவினை நியமிப்பதற்கான தீர்மானம் – முன்மொழியப்படவுள்ளது (2026.01.23ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(4) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் திகதி குறிக்கப்படாத பிரேரணை முன்னறிவித்தலின் கீழான 1ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் 2026 பெப்ரவரி 18 புதன்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது (இக்கட்டளைகள் 2026.02.05 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கட்டதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2026.02.06ஆம் திகதி வெளியிடப்படவுள்ள 3(5) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)(ii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (235 ஆம் அத்தியாயம்) – அங்கீகரிக்கப்படவுள்ளது (இத்தீர்மானம் 2026.02.05 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.02.06ஆம் திகதி வெளியிடப்படவுள்ள 3(5) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)(iii) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் (203 ஆம் அத்தியாயம்) (இவ்வொழுங்குவிதிகள் 2026.02.06 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கட்டதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2026.02.06ஆம் திகதி வெளியிடப்படவுள்ள 3(5) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) 2026 பெப்ரவரி 19 வியாழக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2026.02.06 ஆம் திகதிய 129 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 83 ஆம் இலக்க விடயம்)(ii) நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு(2026.02.06 ஆம் திகதிய 129 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 84 ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் 2026 பெப்ரவரி 20 வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.30 மின்சாரத் துறை தொடர்பான பிரச்சினைகள் பற்றிய ஒத்திவைப்பு பிரேரணை (எதிர்க்கட்சி)
2026-01-23
2026, ஜனவரி 23 மற்றும் பெப்ரவரி 03 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 பெப்ரவரி மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது. 2026 பெப்ரவரி 03 செவ்வாய்க்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - அங்கீகரிக்கப்படவுள்ளது (இவ்வொழுங்குவிதிகள் 2026.01.23 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.01.23ஆம் திகதி வெளியிடப்படவுள்ள 3(4) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) 2026 பெப்ரவரி 04 புதன்கிழமை பாராளுமன்ற அமர்வு இல்லை(சுதந்திர தினம் – பொது விடுமுறை) 2026 பெப்ரவரி 05 வியாழக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.30 (i) இலங்கை நிலையான சொத்து உயர்தொழிலர்கள் நிறுவகம் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (2026.02.03 ஆம் திகதிய 127 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்) (ii) கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2026.02.03 ஆம் திகதிய 127 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3 ஆம் இலக்க விடயம்) (iii) கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தப்படாப் பொதுக் காவுநர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2026.02.03 ஆம் திகதிய 127 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 ஆம் இலக்க விடயம்) 2026 பெப்ரவரி 06 வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.30 பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது (2026.01.28 ஆம் திகதிய 2473/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியைப் பார்க்க. பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 ஐ இடைநிறுத்தியதன் பின்னர் இத்தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது) பி.ப. 5.30 அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது (2026.01.28 ஆம் திகதிய 2473/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியைப் பார்க்க. 2026.02.03 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 ஐ இடைநிறுத்தியதன் பின்னர் இப்பிரேரணை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது)