01

E   |   සි   |  

2026 மார்ச் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “தித்வா” புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அரசிறைக் கொள்கைத் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ii)    2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2026.01.06 முதல் 2026.01.29 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க                 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே. சுஜித் சஞ்ஜய பெரேரா                   
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன்                   
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்
வடக்கு மாகாணத்தில் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட கால்நடை விவசாயிகளுக்கு இழப்பீடு

கௌரவ கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
2009 ஆம் ஆண்டு முதல் தனிநபர் கொலைகள் தொடர்பான சிக்கல்கள்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் இலங்கையின் ஈடுபாடு தொடர்பாக 2025.11.18 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர அவர்கள் பதிலளித்தார்.


ஒத்திவைப்பு பிரேரணை
“சர்வதேச மகளிர் தினத்தை” ஒட்டிய ஒத்திவைப்பு பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சமன்மலீ குணசிங்ஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1747 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மார்ச் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks