பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : "நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் பயன்படுத்தப்படும் அதிகாரங்களை ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்கும் பிரேரணை" தொடர்பான தீர்ப்பு
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) தேசிய அரச பேரவையின் 1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும், 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 19(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான சுங்கத்தீர்வை வரி அறவீடு தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 நவெம்பர் 11 ஆம் திகதிய 2462/09 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுற்றுலாத்துறை அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii) 2024 ஆம் ஆண்டுக்கான ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(iv) 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான பனை அபிவிருத்தி சபையின் வருடாந்த அறிக்கைகள்
(v) 2023 ஆம் ஆண்டுக்கான வர்த்தகத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi) 2024 ஆம் ஆண்டுக்கான விமானநிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனியின் ஆண்டறிக்கை
(vii) 2015 ஆம் ஆண்டுக்கான வ/ப லங்கா கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(viii) 2023 ஆம் ஆண்டுக்கான நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(ix) 2024 ஆம் ஆண்டுக்கான கட்டிடத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x) 2024 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத் தொழிற்சாலைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) அனில் ஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக, அதன் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக, அதன் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகர்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா - நான்கு மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ ரவி கருணாநாயக்க
இலங்கையர்கள் மீது இங்கிலாந்து அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கங்கள்
(ii) கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா
முல்லைதீவு வைத்தியசாலையில் பாடசாலை மாணவியின் உயிரிழப்பு
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்த்திருத்தத்திலுள்ள சிக்கல்கள் தொடர்பாக 2026.01.08 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேதமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
(ii) இலங்கை மீதான அமெரிக்க வரி விதிப்பால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் சுயாதீன ஊழியர் சேமலாப நிதிய அதிகாரசபையினை நிறுவுதல் தொடர்பாக முறையே 2025.08.21 மற்றும் 2025.11.27 ஆம் திகதிகளில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர், கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 79மற்றும் 80ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(ii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன
அதனையடுத்து, 1734 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜனவரி 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks