பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2024 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்.
(ii) 2024 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்.
(iii) 2024 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழக கணனிக் கல்லூரியின் ஆண்டறிக்கை.
(iv) 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 24(4) ஆம் பிரிவு மற்றும் 2025 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவு என்பவற்றின் பிரகாரம் 2025 யூலை 01 ஆந் திகதி முதல் 2025 செப்தெம்பர் 30 ஆந் திகதி வரை செய்யப்பட்ட “வீரமென்ட் நடைமுறை மூலம் ஒதுக்கீடுகளை மாற்றுதல்” தொடர்பான விவரங்கள் குறித்த அறிக்கை.
(v) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை காலநிலை நிதியம் (தனியார்) நிறுவனத்தின் ஆண்டறிக்கை.
(vi) 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஆண்டறிக்கை.
(vii) 2023 ஆம் ஆண்டுக்கான செலசினெ தொலைக்காட்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ உபுல் கித்சிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி (செல்வி) லக்மாலி ஹேமசந்திர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரீ. பீ. சரத்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன - நான்கு மனுக்கள்
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெபனி பிரனாந்து - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். சமந்த ரனசிங்ஹ - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலிண சமரகோன்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் ராஜபக்ஷ்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
மட்டக்களப்பிலுள்ள காணிப் பிரச்சினைகள்
கௌரவ காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ சிவஞானம் சிறீதரன்
வட்டகச்சியிலுள்ள கமத்தொழில் பாடசாலை மற்றும் பண்ணை இயங்காமை
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) தென் கொரிய வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான அரசு – அரசிற்கிடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின் விபரங்கள் தொடர்பாக 2025.12.19 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேதமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் பதிலளித்தார்.
(ii) லக்விஜயா மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி வழங்கல் தொடர்பான கூற்றொன்றினை வலுசக்தி அமைச்சர் கௌரவ குமார ஜயகொடி அவர்கள் முன்வைத்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தினை நீக்குவதற்காக
“பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம்
(ii) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசனாயக
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கித்சிறி
அதனையடுத்து, 1739 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜனவரி 08ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks