01

E   |   සි   |  

2026 ஜனவரி 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்
1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) 
2 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) 


சபாநாயகரின் அறிவித்தல்கள்
3 : "இலங்கை நிலையான சொத்து உயர்தொழிலர்கள் நிறுவகம்" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
•    2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLVI (46) ஆம் பகுதியையும்; மற்றும்
•    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXIII (33) ஆம் பகுதியையும், மூன்றாம் தொகுதியின் XXII (22) ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XX (20) ஆம் பகுதி



பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2021/2022 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட ரக்னா ஆரக்சக லங்கா நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய காப்பறுதி நம்பிக்கை நிதியத்தின் ஆண்டறிக்கை.
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானம் பற்றிய உயர்கல்வி தொடர்பான தேசிய நிலையத்தின் பத்தொன்பதாவது ஆண்டறிக்கை.
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானப் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை.
(v)    2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 9 ஆவது பிரிவின் கீழ் நலன்புரி நன்மைகள் தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2025 திசெம்பர் 15 ஆம் திகதிய 2467/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மை கொடுப்பனவு நிகழ்ச்சித்திட்டம். 
(vi)    1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவுக்கமைய சனாதிபதி அவர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம், 2025 திசெம்பர் 28 ஆம் திகதிய 2468/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்.
(vii)    2025 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2025.11.01 முதல் 2025.11.30 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்தி செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(viii)    2022 ஆம் ஆண்டுக்கான அரச அபிவிருத்தி, நிருமாணக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(ix)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(x)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய நீரியல் வாழ் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (செல்வி) அம்பிகா சாமிவெல்
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
மின்சாரக் கட்டணங்களை அதிகரித்தல்

கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ ரவி கருணாநாயக்க
ஐக்கிய அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையிலுள்ள சிக்கல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii)    கடற்றொழிலாளர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(iv)    மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தோ்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு



அதனையடுத்து, 1740 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜனவரி 07ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks