பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மனுக்களின் பிரதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டங்களின் மூலம் திருத்தி அமைக்கப்பட்ட, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 திசெம்பர் 01 ஆம் திகதிய 2465/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ii) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154 ண உறுப்புரையின் (4) (அ) உபபிரிவின் பிரகாரம் 2026 ஆம் ஆண்டிற்கான நிதி ஆணைக்குழுவினால் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படும் பரிந்துரைகள்
(iii) 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv) 2024 ஆம் ஆண்டுக்கான அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் வருடாந்த அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பீ. ஆரியவங்ஷ - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஜகத் குணவர்தன - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
தென் கொரிய வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான அரசு – அரசிற்கிடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின் விபரங்கள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) இலங்கை மின்சார சபையின் வருமானம் மற்றும் செலவு விபரங்கள் தொடர்பாக 2025.09.10 அன்று பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
(ii) சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத் துறை மற்றும் நீதித்துறை சீர்திருத்தங்களை இயற்றுதல் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பாக 2025.09.24 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சதுரங்க அபேசிங்ஹ அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2025 ஒக்தோபர் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 240 - நிகழ்ச்சித்திட்டம் 02 (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 ஆம் இலக்க விடயம்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1807 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜனவரி 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks