01

E   |   සි   |  

 திகதி: 2018-08-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0499/2018: Officials governing the Local Government Bodies

499/ '18

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (​i) இன்றளவில் பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி நிறுவனங்கள் கலைக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவற்றின் நிருவாக நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற ஆட்கள் யார் என்பதையும்;

(ii) இவர்களின் பெயர்கள் மற்றும் பதவிகள் யாவை என்பதையும்;

(iii) உள்ளூராட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகன ஒதுக்கங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iv) இன்றளவில் உள்ளூராட்சி நிறுவனங்கள் பிரதிநிதிகளின்றி இயங்குவதால், மேற்படி உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்கள் வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

(v) ஆமெனில், வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் ஆட்கள் தொடர்பான விபரங்கள் யாவை என்பதையும்;

(vi) சட்ட விரோதமாக வாகனங்கள் வழங்கப்பட்டிருப்பின், அது தொடர்பாக அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-08

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks