01

E   |   සි   |  

 திகதி: 2018-06-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0381/2018: Gratuity due to estate workers of Government owned estates not paid for years

381/ '18

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அரசாங்கத்திற்குச் சொந்தமான மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கும் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திற்கும் சொந்தமான தோட்டங்களில் சேவையாற்றுகின்ற தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படுகின்ற ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் மற்றும் பணிக்கொடை கொடுப்பனவு ஆகியன 2016 ஆம் ஆண்டு இறுதியளவிலும், பல வருடங்களாகவும் மேற்படி ஊழியர்களுக்கு செலுத்தப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) மேற்படி தோட்டங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் இற்றைவரை இவர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைப் பணத் தொகைகள் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(iii) நிதியங்கள் கிடைக்க வேண்டிய சில தொழிலாளர்கள் ஏற்கனவே இறந்துள்ளனர் என்பதோடு இப்பணத் தொகைகள் இவர்களுக்கு செலுத்தப்படாமையின் மூலம் இவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கு பாரிய அநீதி நேர்ந்துள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iv) இப்பணத் தொகைகளை உடனடியாக தொழிலாளர்களுக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(v) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-05

கேட்டவர்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks