பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அண்மையில் தரமுயர்த்தப்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்துடன் எட்டு தேசிய பாடசாலைகள், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை கல்வி வலயத்தில் உள்ளனவென்பதையும்;
(ii) இதுவரை மேற்படி தேசிய பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்படவில்லையென்பதையும்;
(iii) மேற்படி பாடசாலைகளில் நிரந்தர அதிபர்கள் உள்ளனரென தவறான தகவல்கள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளனவென்பதையும்;
(iv) கல்வி அமைச்சின் சீரான மேற்பார்வையின்றி மேற்படி பாடசாலைகள் இயங்குவதாக இலங்கை கல்வி நிர்வாக உத்தியோகத்தர்களின் சங்கம் குற்றஞ்சாட்டுகின்றதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் கட்டாயமாக பட்டதாரிகளாக இருக்க வேண்டுமென்ற பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவின் கட்டளையின் பிரகாரம், மேலே குறிப்பிடப்பட்ட பாடசாலைகளுக்கு தகுதியான நிரந்தர அதிபர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனின், இது நடைமுறைப்படுத்தப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-09
கேட்டவர்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(அ) (i) கல்முனை கல்வி வலயத்தில் தற்போது 03 தேசிய பாடசாலைகள் மட்டுமே உள்ளன. அவையாவன;
01. கல்/அல் - அஷ்ரஃப் மத்திய வித்தியாலயம்
02. கல்/கார்மேல் பாத்திமா மத்திய வித்தியாலயம்
03. கல்/ஸாஹிரா வித்தியாலயம்.
தம்பிலுவில் மத்திய வித்தியாலயம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குரிய பாடசாலையாகும்.
(ii) நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்படவில்லை. அம்மூன்று பாடசாலைகளுக்கும் அதிபர்களை நியமிப்பது குறித்துப் பத்திரிகை விளம்பரம் மூலமாக விண்ணப்பங்களைக் கோரி, அதற்கு அமைவாக அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக் கமிட்டியினால் அந்தப் பாடசாலைகளுக்கான நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்படுவார்கள்.
(iii) மேற்கூறிய தேசியப் பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்கள் இல்லை என்பதும் தற்போது பதில் அதிபர்கள்தான் கடமையாற்றுகிறார்கள் என்பதும் அமைச்சுக்குத் தெரியும். அதற்கு அமைவாக அப்பாடசாலைகளின் அதிபர் பதவிக்கு பத்திரிகை விளம்பரம் மூலமாக விண்ணப்பங்கள் கோருவதற்கு அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
(iv) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள். அவ்வாறான பாடசாலைகள் தொடர்பாக விசேட நடவடிக்கைகள் எடுப்பதற்காக கல்வி அமைச்சினால் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளை மற்றும் தமிழ் பாடசாலை அபிவிருத்திக் கிளை அமைக்கப்பட்டிருப்பதுடன், வெவ்வேறு இரண்டு கல்விப் பணிப்பாளர்களின் கீழ் அப்பாடசாலைகள் மேற்பார்வை செய்யப்பட்டும் வருகின்றது. அதற்கும் மேலாக இலங்கை தேசிய பாடசாலைகளின் மேற்பார்வை தொடர்பாக கல்வி அமைச்சினுள் தேசிய பாடசாலைக் கிளை, மேலாண்மை தரக்கிளை என்பன செயற்படுகின்றன.
(ஆ) (i) தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் கட்டாயமாக பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்று அரச சேவை ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்படவில்லை.
சிரேஷ்டத்துவத்திற்கு அமைவாக நேர்முகப் பரீட்சையில் ஆகக்கூடிய புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர்களை அதிபர்களாக இணைத்துக்கொள்வதற்கான பரிந்துரைகள் அரச சேவை ஆணைக்குழுவினால் கல்விச் சேவை கமிட்டிக்கு வழங்கப்பட்டு, அக்கமிட்டியினால் அதிபர்கள் நியமிக்கப்படுவது வழமையாக இருக்கின்றது.
(ii) தேசிய பாடசாலைகளின் அதிபர் நியமனத்திற்காக அதிபர்கள் குழாம் ஒன்றை அமைப்பதற்குரிய ஆவணங்களை அரச சேவை ஆணைக்குழு கல்விச் சேவைக் கமிட்டிக்கு அனுப்பியிருப்பதோடு, அதன் அனுமதி கிடைத்ததும் உரிய குழாமை அமைத்து தேசிய பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
(இ) உரித்தானதல்ல.
பதில் தேதி
2017-08-08
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) வீ.எஸ். இராதாகிருஷ்ணன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks