01

E   |   සි   |  

 திகதி: 2015-10-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0012/2015: கரம் மற்றும் சதுரங்கப் பலகைகள் கொள்வனவு :விபரம்

12/ '15

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2014 ஆம் ஆண்டில் விளையாட்டுத்துறை அமைச்சினால் ரூ. 39,061,290.12 பெறுமதியான 14000 கரம் பலகைகளையும் 14000 சதுரங்க பலகைகளையும் பகிர்ந்தளித்தல் விளையாட்டுத்துறை அமைச்சின் 2014 ஆம் ஆண்டுக்குரிய செயற்பாட்டுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்ததா என்பதையும்;

(ii) பாராளுமன்றத்தினால் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டின் கீழ் மேற்படி கரம் பலகைகளையும் சதுரங்க பலகைகளையும் கொள்வனவு செய்வதற்காக விளையாட்டுத்துறை அமைச்சிற்கு நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டிருந்ததா என்பதையும்;

(iii) ஆமெனின், அத்தொகை எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) சதொசவினால் கொள்வனவு செய்யப்பட்ட இப்பொருட்கள் அமைச்சின் களஞ்சியங்களில் முறையாக கையேற்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

(ii) அமைச்சின் களஞ்சியங்களில் கையேற்கப்படவில்லையெனில், மேற்படி பொருட்களை கையேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் நிறுவனங்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் எஞ்சிய பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் யாவை என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) கொள்வனவு நடைமுறைகளின்றி முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆலோசனைக்கு ஏற்ப கொள்வனவு செய்யப்பட்ட போதிலும் அமைச்சுக்கு கிடைக்கப்பெறாத விளையாட்டுப் பொருட்கள் பற்றி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நடத்தப்படுகின்ற புலனாய்வுகளின் முன்னேற்றம் யாதென்பதையும்;

(ii) இது தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாவர் என்பதையும்;

(iii) இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நீதிமன்ற நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-22

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2015-11-21

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks