01

E   |   සි   |  

 திகதி: 2010-06-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0113/2010: Projects for Drinking Water Supply

0113/ ’10

கெளரவ (திருமதி) ஸ்ரீயானி விஜேவிக்கிரம,—  நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    திகாமடுல்ல மாவட்டத்தின் அம்பாறை தேர்தல் தொகுதியில் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள,

           (i)     பிரதானமான குடிநீர் வழங்கல் திட்டங்கள் எவை என்பதையும்,

(ii) அந்த ஒவ்வொரு நீர் வழங்கல் திட்டமும் ஆரம்பிக்கப்பட்ட திகதிகள் எவையென்பதையும்,

(iii) அவற்றின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் பிரதேச செயலாளர் பிரிவுகள் எவை என்பதையும்,

(iv) ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிற்கும் நீர் வழங்கப்பட்டது எத்திகதியிலிருந்து என்பதையும்,

(v) அந்த நீர் வழங்கல் திட்டத்தினூடாக குடிநீர் வழங்கப்படாத பிரதேச செயலாளர் பிரிவுகள் எவை என்பதையும்,

(vi) அவற்றிற்கு குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) அம்பாறை நகரிற்கு நீரை விநியோகிக்கும் நீர் தாங்கியின் திருத்த வேலைகள் முடிவடையும் வரை அம்பாறை நகரின் நீர் விநியோகம் தொடர்பில் தற்காலிகமாக எடுக்கும் நடவடிக்கைகள் எவை என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-06-08

கேட்டவர்

கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல், வடிகாலமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks