01

E   |   සි   |  

 திகதி: 2014-01-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

4074/2014: பாதுகாப்பற்ற புகையிரதக் குறுக்குப் பாதை விபத்துக்கள் : பாதுகாப்பு வேலைத்திட்டம்

4074/ ’13

கெளரவ (திருமதி) அனோமா கமகே,—  போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பாதுகாப்பற்ற புகையிரதக் குறுக்குப் பாதைகளில் ஏற்பட்டுள்ள விபத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

           (ii)    அவ்வாறான விபத்துக்கள் காரணமாக அங்கவீனமடைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி விபத்துக்களை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) தற்போது அடையாளங்காணப்பட்டுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் குறுக்குப் பாதைகள் காணப்படுகின்ற இடங்கள் யாவையென்பதையும்;

(ii) அந்தந்த இடங்களில் விபத்துக்களை குறைப்பதற்காக மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கும் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

(iii) மேற்படி பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கு செலவாகும் பணத் தொகை மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், அப் பணத்தொகை எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள புதிய புகையிரத பாதுகாப்புக் கடவைகள் மற்றும் பாதுகாப்பு மின் சமிக்ஞை முறைமைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி பொருத்துதல்கள் மேற்கொள்ளப்பட்ட இடங்கள் யாவையென்பதையும்

(iii) அதற்காக ஏற்கப்பட்ட செலவு எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-01-22

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-06-03

பதில் அளித்தார்

கௌரவ றோஹண திஸாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks