01

E   |   සි   |  

 திகதி: 2012-11-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

2830/2012: ශල්‍ය අත් වැසුම් මිලදී ගැනීම : වංචාව

2830/ ’12

கெளரவ இரான் விக்கிரமரத்ன,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)          வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் மருத்துவக் கையுறைகளின் வழங்குநர்களைத் தெரிவுசெய்யும் முறை யாதென்பதையும்;

(ii) மருத்துவக் கையுறைகளைக் கொள்வனவு செய்யத் தீர்மானம் மேற்கொள்ளும் நபர்களின் பெயர்கள் மற்றும் பதவிகள் யாவையென்பதையும்;

(iii) வழங்கல் திகதி, வழங்கல் காலப்பகுதி மற்றும் ஒப்புக்கொண்ட காலத்தினுள் வழங்க முடியாமை என்பன தொடர்பாக வழங்கல் ஒப்பந்தத்திலுள்ள நியம வாசகங்கள் யாவையென்பதையும்;

(iv) 2008, 2009, 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் மருத்துவக் கையுறைகளின் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகள் மற்றும் செலவு செய்யப்பட்ட தொகைகள் போன்றன தனித்தனியாக யாவையென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) முதற்கட்ட விசாரணையில் மருத்துவக் கையுறைகளின் கொள்வனவு தொடர்பாக முறைகேடொன்று வெளிக்கொணரப்பட்டுள்ளது என்பதையும்;

(ii) இம்முறைகேடு மேலதிக விசாரணைக்காக நிதி, திட்டமிடல் அமைச்சுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும்

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) (i) மேற்கூறப்பட்ட முறைகேட்டின் தன்மை யாதென்பதையும்;

(ii) முறைகேட்டினால் ஏற்பட்ட பண நஷ்டத்தையும்;

(iii) விசாரணையானது ஆ(ii) இன் படி நடைபெற்றிருப்பின், அதன் விளைவுகளையும்

அவர் கூறுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-23

கேட்டவர்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-04-23

பதில் அளித்தார்

கௌரவ மைத்ரீபால சிறிசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks