04

E   |   සි   |  

 திகதி: 2025-02-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0424/2025: வவுனியா நகருக்கான குடிநீர் விநியோகத் திட்டம்: பிரச்சினைகள்

424/2025
கௌரவ (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வவுனியா நகருக்கான குடி நீர் விநியோகத் திட்டம், 2010-2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைமுறைப் படுத்தப்பட்டதுடன், இத்திட்டத்திற்காக வயல் நிலங்கள், மேட்டுக் காணிகள், குடியிருப்புக்கள் மற்றும் மதத்தலங்கள் ஆகியன சுவீகரிக்கப்பட்டன என்பதையும்;
(ii) விவசாயிகள் மற்றும் காணி உரிமையாளர்களைப் பாதிக்காத வகையில், இது தொடர்பில் விவசாய அமைப்புகள், பிரதேச செயலாளர் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகிய தரப்புகளுக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தமொன்று 2013.11.05 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது என்பதையும்;
(iii) சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளுக்குப் பதிலாக வழங்கப்பட்டுள்ள மாற்றுக் காணிகளுக்கு இதுவரையில் பூரண அளிப்புப்பத்திரங்களை வழங்குதல், முறையான நீர்ப்பாசன வசதிகள் மற்றும் உட்பிரவேசப் பாதைகளை நிர்மாணித்தல் மற்றும் புனரமைத்தல் ஆகியன மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;
(iv) பாதிக்கப்பட்டுள்ள விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மேற்படி குடிநீர் விநியோகத் திட்டத்தின் கீழ் இதுவரையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதையும்;‍
(v) அணைகளிலிருந்து வெளியேறும் மேலதிக நீரை கமநல அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான, புனரமைக்கப்பட்டுள்ள குளங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) ஆமெனில், மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-20

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-04-08

பதில் அளித்தார்

கௌரவ அனுர கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks