01

E   |   සි   |  

 திகதி: 2023-08-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

3482/2023: National schools in Kandy District

3482/2023

கௌரவ வேலு குமார்,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கண்டி மாவட்டத்தில் தேசியப் பாடசாலைகளாக உள்வாங்கப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கையையும்;

         (ii)    அவற்றில் சிங்கள மொழிப் பாடசாலைகள், தமிழ் மொழிப் பாடசாலைகள் என்றவகையில் வெவ்வேறாக அவற்றின் எண்ணிக்கையையும்;

அவர் இச்சபைக்குத் தொிவிப்பாரா?

(ஆ) (i) தேசிய பாடசாலை ஒன்றுக்கான நியமனங்களுக்கு அமைய, பாடசாலை கொண்டிருக்க வேண்டிய தளப்பரப்பு, மாணவர் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை யாதென்பதை வெவ்வேறாகவும்;

(ii) மேலே (அ) (i) இல் உள்ள தேசியப் பாடசாலைகள் அவ்வாறான நியமனங்களுக்கு உட்பட்டவையா என்பதையும்;

(iii) அவ்வாறு இல்லையெனில், அப்பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக உள்வாங்கப்பட்டதற்கான  அடிப்படை என்ன என்பதையும்;

அவர் இச்சபைக்குத் தொிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-08-22

கேட்டவர்

கௌரவ வேலு குமார், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks