01

E   |   සි   |  

 திகதி: 2023-07-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1462/2023: மதுவரித் திணைக்களப் பணியாளர்கள்: சம்பளமும் கொடுப்பனவுகளும்

1462/2023

கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல்,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மதுவரி திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாட்டொகுதி யாது என்பதையும்;

(ii) மதுவரி திணைக்களத்தில் பணியாற்றுகின்ற, அத்திணைக்களத்தைச் சேர்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் இணைந்த சேவைக்குச் சொந்தமான பணியாளர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது என்பதையும்;

(iii) மதுவரி திணைக்களத்தைச் சேர்ந்த நிறைவேற்றுத் தர அலுவலர்கள், நிறைவேற்றுத் தரமல்லாத அலுவலர்கள் மற்றும் கனிஷ்ட பணியாளர்களுக்குச் செலுத்தப்படுகின்ற மாதாந்த சம்பளமும் கொடுப்பனவுகளும் ஒவ்வொரு பதவிக்கு இணங்க வெவ்வேறாக யாது என்பதையும்;

(iv) இணைந்த சேவையைச் சேர்ந்த நிறைவேற்றுத் தர அலுவலர்கள், நிறைவேற்றுத் தரமல்லாத அலுவலர்கள் மற்றும் கனிஷ்ட பணியாளர்களுக்குச் செலுத்தப்படுகின்ற மாதாந்த சம்பளமும் கொடுப்பனவுகளும் ஒவ்வொரு பதவிக்கு இணங்க வெவ்வேறாக யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-19

கேட்டவர்

கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-10-18

பதில் அளித்தார்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks