01

E   |   සි   |  

 திகதி: 2021-02-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0597/2021: நயினாதீவு வைத்தியசாலை: வெற்றிடங்கள்

597/2020

கௌரவ சிவஞானம் சிறீதரன்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) யாழ்ப்பாணம் மாவட்டத்தின், வேலணை பிரதேச செயலாளர் பிரிவின், நயினைத்தீவு பிரிவுக்கு உரித்தான ஒரே அரசாங்க வைத்தியசாலை நயினைத்தீவு வைத்தியசாலை என்பதை அவர் அறிவாரா?

(ஆ) மேற்படி வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமனம் செய்யாமை ​ காரணமாக மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர் என்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா?

(இ) (i) மேற்படி வைத்தியசாலைக்கு இதுவரை நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமனம் செய்யாமைக்கான காரணம் யாதென்பதையும்;

(ii) மேற்படி வைத்தியசாலைக்காக அங்கீகரிக்கப்பட்ட பணியாட்டொகுதி பற்றிய தகவல்களையும்;

(iii) அம்மக்களுக்கு திருப்திகரமான மருத்துவ சேவையைப் வழங்குவதற்காக நயினைத்தீவு வைத்தியசாலையில் தற்போது நிலவுகின்ற பணியாட்டொகுதி வெற்றிடங்கள் நிரப்பப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-02-11

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-02-11

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர் திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks