01

E   |   සි   |  

 திகதி: 2020-11-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0591/2020: Issues in Potuvil Educational Zone

591/2020

கௌரவ எஸ். எம். எம். முஸ்ஸாரப்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) இலங்கையில் காணப்படும் ஒரேயொரு உப கல்வி வலயம், பொத்துவில் உப கல்வி வலயம் என்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி வலய அலுவலகத்தில் பணி புரிகின்ற இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் இருவருக்கும் நிருவாகப் பொறுப்புக்கள் வழங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும் ;

(ii) முறையாக அதிகாரமளிக்கப்பட்டுள்ள உப கல்வி வலயமாகக் காணப்படுகின்ற போதிலும், இவ்விதம் உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதையும் ;

(iii) இந்த நிலைமை காரணமாக, பொத்துவில் பிரிவினைச் சோ்ந்த ஆசிரியர்களுக்கு சிறியதொரு கடமையின் நிமித்தமும் அக்கரைப்பற்று வலய அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியுள்ளமையினால், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) பொத்துவிலில் உள்ள சகல பாடசாலைகளையும் ஒருங்கிணைத்து பொத்துவில் பிரதேசத்திற்குத் தனியானதொரு கல்வி வலயத்தை தாபிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அது தாபிக்கப்படும் திகதி யாது என்பதையும் ;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) பல்வித இனங்களையும் ஒன்றிணைத்தல் அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ள போதிலும், முஸ்லிம் பாடசாலைகள் அக்கரைப்பற்று வலயத்துடனும், தமிழ் பாடசாலைகள் திருக்கோவில் வலயத்துடனும், சிங்களப் பாடசாலைகள் அம்பாறை வலயத்துடனும் வெவ்வேறாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளமையினை அவர் அறிவாரா?

(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-19

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி எஸ். எம். எம். முஸ்ஸாரப், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks