பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
507/2020 கௌரவ ஜகத் குமார,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) கடந்த அரசாங்கத்தினால் அரசியல் அடிப்படையில் சமுர்த்தி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்; (ii) அதன் காரணமாக தகைமை பெற்ற பெருமளவிலானவர்களுக்கு மேற்படி உதவித்தொகை கிடைக்கவில்லையென ஏற்றுக்கொள்வாரா என்பதையும்; (iii) “சுபீட்சத்திற்கான நோக்கு” கொள்கை பிரகடனத்தின் படி சமுர்த்தி உதவித் தொகை கிடைக்கப் பெறாதவர்களுக்கு அவற்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்; (iv) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்; (v) சமுர்த்தி உதவித் தொகையின் பெறுமதியை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்; (vi) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) (i) சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு எவ்வித பதவியுயர்வும் கிடைக்கவில்லையென ஏற்றுக்கொள்வாரா என்பதையும்; (ii) மேற்படி பதவியுயர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்; (iii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) (i) தற்போதைய அரசாங்கத்தினால் சமுர்த்தி திட்டத்தினதும் சமுர்த்தி உத்தியோகத்தர்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பல அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்; (ii) மேற்படி அமைச்சரவை பத்திரங்கள் ஊடாக சமர்ப்பிக்கப்பட்ட பிரச்சினைகள் யாவையென்பதையும்; (iii) இற்றைவரையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-11-03
கேட்டவர்
கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-11-26
பதில் அளித்தார்
கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks