01

E   |   සි   |  

 திகதி: 2020-10-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0478/2020: Initiated fishing ports 2015-2020

478/2020

கெளரவ திலிப் வெதஆரச்சி,— கடற்றொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகங்களின் எண்ணிக்கை;

(ii) இவற்றில் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகங்களின் எண்ணிக்கை;

(iii) புதிதாக நி்ாமாணிப்பதற்கு உத்தேசித்துள்ள மீன்பிடித் துறைமுகங்களின் எண்ணிக்கை;

யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள மாவெல்ல நங்கூரத் தளம், ரெக்கவ நங்கூரத்தளம், அம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகம் மற்றும் கந்தர மீன்பிடித் துறைமுகங்களின் தற்போதைய நிலைமை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-21

கேட்டவர்

கௌரவ திலிப் வெதஆரச்சி, பா.உ.

அமைச்சு

கடற்றொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ) (i)        புதிதாக நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகங்களின் எண்ணிக்கை 02 ஆகும். ஒன்று, புத்தளம் மாவட்டத்திலுள்ள வெள்ளமன்கர மீன்பிடித் துறைமுகம்; அடுத்தது, சமீபத்தில் கட்டுமானப்பணிளை ஆரம்பித்து வைத்த மாத்தறை கந்தர மீன்பிடித் துறைமுகம்.

          (ii)     வெள்ளமன்கர மீன்பிடித் துறைமுகத்தைப் பொறுத்தவரையில் 80 சதவீத வேலைகள் முடிவுற்றிருக்கின்றன. வருகின்ற ஏப்ரல் மாதம் முற்றுமுழுதாக அது முடிவுபெறும். அத்துடன், அங்கிருக்கின்ற கடற்றொழிலாளர் சங்கத்தினர் தங்களுக்கு 60 மீற்றர் நீளமும் 5 அடி அகலமும்கொண்ட 3 finger jetties  கட்டித்தருமாறு கேட்டிருக்கின்றார்கள். இந்தத் துறைமுகத்தைத் திறந்துவைத்த பிற்பாடு அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும். அதைவிட,  அவர்கள் ஒரு travel lift கேட்டிருந்தார்கள். அதுவும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

(iii) புதிதாக நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ள மாத்தறை கந்தர மீன்பிடித் துறைமுக வேலைகள் 5,832 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக வருகின்ற வருடத்திற்கு 1,590 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. 3 வருடங்களில் அந்தத் துறைமுகம் பூர்த்தியாகிவிடும்.

(ஆ) மாவெல்ல மற்றும் ரெக்கவ நங்கூரமிடும் தளங்கள் நிர்மாணிப்பதற்குப் பொருத்தமான ஒப்பந்தக்காரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இவற்றின் ஆரம்பப் பணிகள் கடந்த 06ஆம் திகதி கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வைபவத்தில் தாங்களும் கலந்துகொண்டிருந்தீர்கள். இவற்றில் மாவெல்ல நங்கூரமிடும் தளத்தின் பணிகள் 15 மாதங்களிலும் ரெக்கவ நங்கூரமிடும் தளத்தின் பணிகள் 12 மாதங்களிலும் பூர்த்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதேநேரம்  கந்தர மீன்பிடித் துறைமுகத்தின் ஆரம்பப் பணிகளும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கடந்த 06ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் 3 வருடங்களில் பூர்த்தி செய்யப்படுமென  எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றுக்கான நிதியொதுக்கீடுகள் 2020ஆம் ஆண்டு இடைக்காலக் கணக்கறிக்கையின்மூலம் ஒதுக்கப்பட்டுள்ளன. அம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகத்தின் துறைமுக வாயிலை நவீனமயப்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் கொள்முதல் நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

(இ) ஏற்புடையதன்று.

 

 

பதில் தேதி

2020-12-09

பதில் அளித்தார்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks