01

E   |   සි   |  

 திகதி: 2020-10-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0426/2020: Samurdhi Development Officers

426/2020

கௌரவ ஜகத் குமார,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) தற்போது சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் பணியாற்றுகின்ற —

(i) சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்;

(ii) சமுர்த்தி முகாமையாளர்கள்;

(iii) ஏனைய உத்தியோகத்தர்களின்;

எண்ணிக்கை வெவ்வேறாக யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவியில் ஏராளமான வெற்றிடங்கள் காணப்படுவதை அவர் அறிவாரா?

(இ) (i) ஆமெனில், குறிப்பிட்ட வெற்றிடங்களின் எண்ணிக்கை யாது;

(ii) அவற்றை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

(iii) அவை நிரப்பப்படும் திகதி யாது;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) (i) சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மற்றும் சமுர்த்தி இயக்கத்தின் சிக்கல்களைத் தீர்ப்பதாக "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும்;

(ii) 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கமானது வாழ்வின் எழுச்சி திணைக்களத்தை ஸ்தாபித்து சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய உரித்துவத்தை உறுதிப்படுத்தியது என்பதையும்;

(iii) ஆனால் பெரும்பாலான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இதுவரையில் ஓய்வூதிய உரித்துவம் கிடைக்கப்பெறவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(உ) (i) இவ்வாறு ஓய்வூதிய உரித்து கிடைக்கப்பெறாமைக்கான காரணங்கள் யாவை;

(ii) மேற்படி உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய உரித்துவத்தை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று தயார் செய்யப்பட்டுள்ளதா;

(iii) மேற்படி உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய உரித்து உறுதி செய்யப்படும் திகதி யாது?

என்பதை மேலும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஊ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-23

கேட்டவர்

கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks