02

E   |   සි   |  

 திகதி: 2019-05-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0594/2019: பங்குச் சந்தை பரிமாற்றல்களை உயர்த்துவதற்கு ஏதுவாக மேற்கொள்ளப்பட்ட வரித் திருத்தங்கள்: பெறுபேறு

594/ '19

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவு 287 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வீழ்ச்சியடைந்துள்ள பங்குச் சந்தை பரிமாற்றல்களை உயர்த்துவதற்கு ஏதுவாக மேற்கொள்ளப்பட்ட வரித் திருத்தங்கள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி பயனுறுதிமிக்க மாற்றங்கள் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்ட பங்குப் பரிமாற்றல்கள் உயர்வடைந்த அளவினை சம்பந்தப்பட்ட சுட்டெண்களை பயன்படுத்தி தௌிவுபடுத்துவாரா என்பதையும்;

(iii) 2009 ஆம் ஆண்டின் பின்னர் இற்றைவரை ஒவ்வொரு வருடத்தினதும் பங்குச் சந்தை பரிமாற்றல்களின் அளவு பற்றிய தரவுக் குறிப்பொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iv) யுத்த மோதல்கள் முடிவடைந்த பின்னர் 2010 முதல் 2017 ஆம் ஆண்டு வரை இலங்கையின் பங்குச் சந்தையில் வௌிநாட்டு முதலீடுகளின் போக்கினை தௌிவுபடுத்துவாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-24

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-05-24

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks