01

E   |   සි   |  

ஜனவரி இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2026, ஜனவரி 14ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 ஜனவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2026 ஜனவரி 20 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம்
(2026.01.09ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(3) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.01.20 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்டுள்ள 1ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 
2026 ஜனவரி 21 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவினை நியமிப்பதற்கான தீர்மானம் – பிரேரிக்கப்படவுள்ளது
(2026.01.09ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(3) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் திகதி குறிக்கப்படாத பிரேரணை முன்னறிவித்தலின் கீழான 1ஆம் இலக்க விடயம்)
மு.ப. 11.30 – பி.ப. 5.30 நாட்டில் தித்வா புயலுக்கு பின்னரான நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 
2026 ஜனவரி 22 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)
 
2026 ஜனவரி 23 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2026.01.09ஆம் திகதிய 122 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 83 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks