logo

02

E   |   සි   |  

காண்க

2026, ஜுன் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 ஜுலை மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2026 ஜுலை 07 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.30 (i) தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.06.25 ஆம் திகதிய 159 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 5 ஆம் இலக்க விடயம்)
(ii) ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.06.26 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(15) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.07.07 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட முறையே 8 மற்றும் 9 ஆம் இலக்க விடயங்கள்)
 
2026 ஜுலை 08 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)
மு.ப. 10.30 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 3.30 (i) கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(ii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது

(2026.06.26 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(15) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.07.07 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட முறையே 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்கள்)
(iii) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.06.26 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(15) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.07.07 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட 5 ஆம் இலக்க விடயங்கள்)
(iv) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.06.26 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(15) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.07.07 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட முறையே 6 மற்றும் 7 ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 3.30 – பி.ப. 5.30 வெளிநாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2026 ஜுலை 09 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2026.06.25 ஆம் திகதிய 159 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2, 3 மற்றும் 4ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 
2026 ஜுலை 10 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00

பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன—
(i) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உரிமம் அளிக்கும் செயன்முறையை ஒழுங்குபடுத்துவதற்காக வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்
(கௌரவ நலீன் பண்டார ஜயமஹ)
(ii) இரத்தினபுரி மாவட்டத்தில் கொலொன்ன பிரதேச செயலகத்திற்குரிய மடுவன்வெல பிரபுமனை (வலவ்வ) முதற்கொண்டு இலங்கையில் புராதன பெறுமதி வாய்ந்த தலங்களைப் பாதுகாத்தல்
(கௌரவ உபுல் கித்சிறி)
(iii) “இலங்கை பைத்துல்மால் நிதியம்” என்ற பெயரில் நிதியமொன்றை ஆரம்பித்தல்
(கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்)
(iv) ) பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்தி, தொழில் அபிவிருத்தி மற்றும் தனிநபர் சமூக அபிவிருத்தியின் பொருட்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் பயிற்றப்பட்ட உளவள ஆலோசகர் (Student Counsellor) ஒருவரை நியமித்தல் (கௌரவ (திருமதி) சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ)
(v) “ரட்டவிருவன்” (புலம்பெயர் வீரர்கள்) என்றழைக்கப்படும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றை வகுத்தல் (கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன)
(vi) இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பிலுள்ள உணவகங்களில் மாணவர்களுக்கு பாதகமான உணவு வகைகளை விற்பனை செய்வதை நிறுத்துவதற்கான வழிமுறையொன்றை உருவாக்குதல் (கௌரவ ருவன்திலக்க ஜயகொடி)
(vii) யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறைச் சேவைகளை மேம்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல் (கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி)

பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 
2026, ஜுன் 12 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 ஜுன் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2026 ஜுன் 23 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2026.06.12 ஆம் திகதிய 156 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 81 ஆம் இலக்க விடயம்)
(ii) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.06.12 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(14) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.06.23 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்டுள்ள 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்கள்)
(iii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.06.12 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(14) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.06.23 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்டுள்ள 3 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 நிகழ்நிலைக் காப்புச்சட்டம் (இரத்துச் செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு – பிரேரிக்கப்படவுள்ளது
(2026.06.12 ஆம் திகதிய 156 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 89 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2026 ஜுன் 24 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 தேசிய சூழல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2026.06.12 ஆம் திகதிய 156 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 80 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 
2026 ஜுன் 25 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.30 போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் – தொடரப்படவுள்ளது (அரசாங்கம்)
 
2026 ஜுன் 26 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 2.30 இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ் கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.06.12 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(14) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.06.23 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்டுள்ள 4ஆம் இலக்க விடயம்)
பி.ப. 2.30 - பி.ப. 5.30 போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி (அரசாங்கம்)
 
2026, ஜுன் 1 மற்றும் 9 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 ஜுன் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2026 ஜுன் 09 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 2.30 (i) முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது
(ii) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது
(iii) உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது
(iv) பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது

(2026.05.22 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(13) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.06.09 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட முறையே 2, 3, 4 மற்றும் 5 ஆம் இலக்க விடயங்கள்)

(v) பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழான தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.05.22 ஆம் திகதிய 152 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 2.30 - பி.ப. 5.30 பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.05.28 ஆம் திகதிய 2490/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியைப் பார்க்க. இத்தீர்மானம் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 ஐ இடைநிறுத்தி எடுத்துக் கொள்ளப்படவுள்ளது)
 
2026 ஜுன் 10 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)
மு.ப. 10.30 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள்
(2026.06.09 ஆம் திகதிய 2492/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி சபையின் விசேட அனுமதியுடன் 2026.06.09 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 ஐ இடைநிறுத்தியதன் பின்னர் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது)
(ii) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.05.28 ஆம் திகதிய 2490/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியைப் பார்க்க. 2026.06.09 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 ஐ இடைநிறுத்தியதன் பின்னர் இத்தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது)
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2026 ஜுன் 11 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 1.30 (i) மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2026.05.22 ஆம் திகதிய 152 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 5 ஆம் இலக்க விடயம்)
(ii) குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.05.22 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(13) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.06.09 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட 7 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 1.30 – பி.ப. 5.30 நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 
2026 ஜுன் 12 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 2.30 (i) இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள்
(2026.05.22 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(13) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.06.09 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட 6ஆம் இலக்க விடயம்)
(ii) 2026 இன் 02 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு – அங்கீகரிக்கப்படவுள்ளது
(தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களம்)

(மேற்சொன்ன குறைநிரப்பு மதிப்பீடு மற்றும் தொடர்புபட்ட பத்திரங்கள் 2026.06.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்)
பி.ப. 2.30 - பி.ப. 5.30 2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி (அரசாங்கம்)
(இவ்விவாதம் 2026.05.20 அன்று ஆரம்பிக்கப்பட்டது)
 
2026, மே 8 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 மே மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2026 மே 19 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2026.05.08 ஆம் திகதிய 148 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 85 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2026 மே 20 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.30 2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)
(2026.05.05 ஆம் திகதி இவ்வறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது)
 
2026 மே 21 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(இவ்வொழுங்குவிதிகள் 2026.05.05 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2026.05.08 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(12) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்படும்)
(ii) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஒன்பது தீர்மானங்கள் – அங்கீகரிக்கப்படவுள்ளன
(2026.04.30 ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(11) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.05.19 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்டுள்ள 1, 2, 3, 4, 5, 6, 7, 8 மற்றும் 9 ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 
2026 மே 22 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 அனுதாபப் பிரேரணைகள் –
(i) மறைந்த கௌரவ (பேரா) திஸ்ஸ விதாரண, முன்னாள் பா.உ.
(ii) மறைந்த கௌரவ எஸ். சீ. முதுகுமாரண, முன்னாள் பா.உ.
(iii) மறைந்த கௌரவ சந்தரதாஸ கலப்பத்தி, முன்னாள் பா.உ.
(iv) மறைந்த கௌரவ நந்தன குணதிலக, முன்னாள் பா.உ.
(v) மறைந்த கௌரவ ஜனக் மஹேந்திர அதிகாரி, முன்னாள் பா.உ.
(vi) மறைந்த கௌரவ ரீ. கனகசபை , முன்னாள் பா.உ.
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 
2026, ஏப்ரல் 27ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 மே மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2026 மே 05 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் நான்கு கட்டளைகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.04.10ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(10) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.05.05 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்டுள்ள 3, 4, 5 மற்றும் 6ஆம் இலக்க விடயங்கள்)
(ii) கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.04.10ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(10) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.05.05 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்டுள்ள 7ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 
2026 மே 06 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)
மு.ப. 10.30 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.30 மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2026.04.10 ஆம் திகதி வெளியிடப்பட்ட 144 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 85 ஆம் இலக்க விடயம்)
 
2026 மே 07 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 12.30 (i) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(ii) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.04.10ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(10) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.05.05 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்டுள்ள 8 மற்றும் 9ஆம் இலக்க விடயங்கள்)
(iii) (351ஆம் அத்தியாயமான) குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(இவ்வொழுங்குவிதிகள் 2026.05.05 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 ஐ இடைநிறுத்தியதன் பின்னர் இப்பிரேரணை 2026.05.07 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படும்)
பி.ப. 1.00 – பி.ப. 5.30 (i) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(கௌரவ சனாதிபதி அவர்களினால் இது தொடர்பான கட்டளை வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் பட்சத்தில் இது எடுத்துக் கொள்ளப்படும்)
(ii) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(கௌரவ சனாதிபதி அவர்களினால் இது தொடர்பான பிரகடனம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் பட்சத்தில் இது எடுத்துக் கொள்ளப்படும்)
 
2026 மே 08 வெள்ளிக்கிழமை

மு.ப. 11.55 வியட்னாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அதிமேதகு டோ லாம் அவர்களின் பாராளுமன்ற உரை
பி.ப. 12.40 பாராளுமன்ற நடவடிக்கை முறையை ஒத்திவைத்தல்
பி.ப. 1.30 பாராளுமன்றம் மீண்டும் கூடுதல்
பி.ப. 1.30 - பி.ப. 5.30

பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன—
(i) தேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்ப்பினை வழங்குதல்
(கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி)
(ii) வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் தொடர்பில் பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரித்தல்
(கௌரவ சமிந்த விஜேசிறி)
(iii) புலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை களுக்குத் தீர்வு காணச் சட்ட அதிகாரங்களுடன் அலகு ஒன்றைத் தாபித்தல்
(கௌரவ ரவி கருணாநாயக்க)
(iv) அடிமட்டத்தில் செயற்படும் நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பிலும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல் (கௌரவ லால் பிரேமநாத்)
(v) பேராசிரியர் பதவிகள் மற்றும் கலாநிதி பட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரித்தல் (கௌரவ ரோஹண பண்டார)
(vi) பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல் (கௌரவ நலின் பண்டார ஜயமஹ)
(vii) பைனஸ் செய்கையால் நீர் மூலங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல் (கௌரவ ரவீந்திர பண்டார)

2026, மார்ச் 19 மற்றும் ஏப்ரல் 7ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 ஏப்ரல் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2026 ஏப்ரல் 07 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 4.45 (i) உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
(இச்சட்டமூலம் 2026.03.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், இச்சட்டமூலத்திற்கு எதிராக அரசியலமைப்பின் 121 ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் எதுவித மனுக்களும் தாக்கல் செய்யப்படாதவிடத்து, இரண்டாம் மதிப்பீட்டிற்காக எடுத்துக் கொள்ளப்படும்)
(ii) சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
(இச்சட்டமூலம் 2026.03.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், இச்சட்டமூலத்திற்கு எதிராக அரசியலமைப்பின் 121 ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் எதுவித மனுக்களும் தாக்கல் செய்யப்படாதவிடத்து, இரண்டாம் மதிப்பீட்டிற்காக எடுத்துக் கொள்ளப்படும்)
(iii) விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளன
(இவ்வொழுங்குவிதிகள் 2026.03.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.03.20 அன்று பிரசுரிக்கப்படவுள்ள 3(9) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)
(iv) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி – அங்கீகரிக்கப்படவுள்ளன
(இவ்வொழுங்குவிதி 2026.03.19 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.03.20 அன்று பிரசுரிக்கப்படவுள்ள 3(9) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)
(v) இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளன
(இவ்விதிகள் 2026.03.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.03.20 அன்று பிரசுரிக்கப்படவுள்ள 3(9) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)
பி.ப. 4.45 - பி.ப. 5.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளைத் திருத்துதல் – அங்கீகரிக்கப்படவுள்ளன
(2026.03.19 வெளியிடப்பட்ட 139 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.30 இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2018) – அங்கீகரிக்கப்படவுள்ளது (விவாதமின்றி)
(2026.03.19 வெளியிடப்பட்ட 139 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 ஆம் இலக்க விடயம்)
 
2026 ஏப்ரல் 08 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 10.30 - மு.ப. 11.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.00 - பி.ப. 5.30 தற்பொழுது நிலவும் நிலைமை தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)
 
2026 ஏப்ரல் 09 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 2.00 (i) தரைப்படைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(ii) கடற்படைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(iii) வான்படைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது

(மேலுள்ள (i.), (ii.) மற்றும் (iii.) ஆகிய ஒழுங்குவிதிகள் 2026.03.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.03.20 அன்று பிரசுரிக்கப்படவுள்ள 3(9) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)
(iv) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(கௌரவ சனாதிபதி அவர்களினால் இத்தீர்மானம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டால், இது எடுத்துக் கொள்ளப்படவுள்ளது)
(v) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(கௌரவ சனாதிபதி அவர்களினால் இத்தீர்மானம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டால், இது எடுத்துக் கொள்ளப்படவுள்ளது)
பி.ப. 2.00 - பி.ப. 5.30 2019 ஏப்ரல் 21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 
2026 ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.30

வலுசக்தி அமைச்சர் கௌரவ குமார ஜயக்கொடி அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
(இப்பிரேரணை 2026.03.20 அன்று பிரசுரிக்கப்படவுள்ள 3(9) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் திகதி குறிக்கப்படாத பிரேரணை முன்னறிவித்தல் கீழ் நிரலிடப்பட்டுள்ளது)

2026, மார்ச் 6 மற்றும் 17ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2026 மார்ச் 17 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் வேதனம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(இத்தீர்மானம் 2026.03.06 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள 3(8) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 
2026 மார்ச் 18 புதன்கிழமை

இத்தினத்தில் பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை)
 
2026 மார்ச் 19 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 2.00 கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.03.17 ஆம் திகதிய 138 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 2.00 - பி.ப. 5.30 உலகின் தற்பொது நிலவும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) – தொடரப்படவுள்ளது
 
2026 மார்ச் 20 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.30 உலகின் தற்பொது நிலவும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி (எதிர்க்கட்சி)
 
2026, பெப்ரவரி 18 மற்றும் மார்ச் 3 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 மார்ச் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2026 மார்ச் 03 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது
(இக்கட்டளை 2026.02.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.02.20ஆம் திகதி வெளியிடப்படவுள்ள 3(7) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2026 மார்ச் 04 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)
மு.ப. 10.30 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2026.02.18ஆம் திகதிய 131 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் 9 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 
2026 மார்ச் 05 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.30 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒத்திவைப்பு விவாதம்
 
2026 மார்ச் 06 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.02.28 ஆம் திகதிய 2477/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியைப் பார்க்க. பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 ஐ இடைநிறுத்தியதன் பின்னர் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.03.06 ஆம் திகதிய 137 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது )

பி.ப. 5.00 அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.02.28 ஆம் திகதிய 2477/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியைப் பார்க்க. பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 ஐ இடைநிறுத்தியதன் பின்னர் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.03.06 ஆம் திகதிய 137 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது)
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks